செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, எடப்பாடி கோஷ்டிக்கு என்ன கோபம் என்று கேட்டால், அவர்களுக்கு பெரிய பிரச்சனை என்னவென்றால் ,ஏக்கப்பட்ட கோபத்தில் இருக்கிறார்கள் அண்ணன் மீது. உதயகுமார் பேசி உள்ளார். உதயகுமார் பேசுவதை நான் கண்டனம் தெரிவித்து இருக்கின்றேன். தேனியில் போய் என்ன செய்தார் உதயகுமார் ? ஓபிஎஸ் வீட்டை சூறையாடுவேன். யாரு இதெல்லாம் செய்வார்கள் ?
பிறகு இங்கே வந்து அவரது வாழ்க்கையை முடித்து விடுவேன். திராவிட முன்னேற்றக் கழகத்தோடு தொடர்பு மறுபடியும் ஜெயக்குமார் சொல்லுறாரு ? எஃப்.ஐ. ஆர் எங்கள் மீதுதானே போட்டாங்க. ரெண்டு கோஷ்டி தானே சண்டை போட்டுச்சு, சேரை போட்டு உட்கார்ந்து இருந்தீர்களே.. ஓபிஎஸ் சொன்னார், ஜேசிபி பிரபாகரன் சொன்னார்.
200 பேர் சேரை போட்டு தண்ணி அடித்து விட்டு தலைமை கழகத்தில் உக்கார்ந்து இருந்தீங்களே. டாஸ்மார்க் கடை தான் ஓபன் செய்வது பாக்கி. மது அருந்தி விட்டு, குத்தாட்டம் போட்டுகொண்டு இதெல்லாம் யார் செய்வார் தலைமை கழக அலுவலகத்திற்குள் ?
எந்த காலத்திலாவது இப்படி நடந்தது உண்டா? இவ்வளவு அயோக்கியத்தனம் செய்து, 200 பேருக்கு சம்பளம் கொடுத்து, ஒரு வாரம் நீங்கள் உட்கார வைத்துள்ளீர்கள். ஆதாரம் இருக்கு, விசாரணை வருவது நல்லது தான் வரட்டும். ஏன் உட்கார வைத்தார்கள்.
அந்த ரவுடிகள் எங்கே இருந்து வந்தார்கள் ? எந்தெந்த ஏரியாவில் இருந்தார்கள் எல்லாமே தெரிந்து விடும். அதற்கு தானே நாங்களும் சும்மா இருக்கிறோம், விசாரணை வேணும் அப்போ தானே யார் யார் மாட்டுகிறார் என்று தெரியும் என தெரிவித்தார்.