அவசர காலத்தில், நெருக்கடி காலத்தில் யார் நமக்கு கை கொடுக்கிறார்களோ இல்லையோ, நம்மிடம் இன்ஷூரன்ஸ் இருந்தால் அது நமக்கு கைகொடுக்கும். இன்சூரன்ஸில் பல வகைகள் உள்ளது. அதில் டெர்ம் இன்சூரன்ஸ் என்பது பாலிஸ்தாரர் குடும்பத்தின் எதிர்காலத்தை காக்க உதவுகிறது. இது முற்றிலும் எதிர்கால பாதுகாப்பிற்கு மட்டுமே பயன்படுமோ தவிர முதலீடாக திரும்ப கிடைக்காது. அதாவது பாலிசிதாரர் டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசி செய்திருந்தால், அந்த குறிப்பிட்ட காலத்தில் அவர் இறந்து விட்டால் இன்சூரன்ஸ் தொகையானது நாமினியாக குறிப்பிட்டுள்ள நபர் அல்லது குடும்பத்தினருக்கு சென்று சேரும். ஆனால் பாலிசிகளை முடிந்துவிட்டால் பிற இன்சூரன்ஸ் பாலிசிகளில் இருப்பது போல பிரீமியம் தொகை திரும்ப கிடைக்காது. அதனைத் தொடர்ந்து பாலிசிதாரர் இறந்த பிறகு அவரது குடும்பத்திற்கான வருமானமாகவும், பிள்ளைகளின் திருமணம், கல்வி போன்ற எதிர்கால பிரச்சனைகளை தீர்க்கவும் டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசி கை கொடுக்கும். பெரும்பாலான மக்கள் டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசி வாங்கும் போது செய்யும் பொதுவான தவறுகள் மற்றும் தவிர்க்கும் முறைகளை பற்றி இங்கு நாம் பார்ப்போம்.
- பாலிசிதாரர் இறந்து விட்டால் அவரது குடும்பத்தினரின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காகவே இன்சூரன்ஸ் பயன்படுத்தப்படுகிறது. எனவே குடும்பத்தின் நிதி தேவையை அறிந்து கொண்டு பாலிசிக்கான முதிர்வு தொகையை திட்டமிட வேண்டும். அதாவது, திரும்ப செலுத்த வேண்டிய கடன்கள், குறுகிய கால செலவுகள், பிள்ளைகளின் படிப்பு மற்றும் கல்யாணத்திற்கு தேவையான தொகை ஆகியவற்றையும், சேமிப்பு, ஃபிக்சட் டெபாசிட், உள்ளிட்டவ்ற்றை கணக்கிட்டு டெர்ம் இன்சூரன்ஸ் தொகை தீர்மானிக்க வேண்டும்.
- அதனைத் தொடர்ந்து இன்சூரன்ஸ் பாலிசிதாரரின் மரணத்திற்கு பிறகு அவர் குடும்பத்தினர் வங்கி கணக்கில் சில லட்சங்கள் அல்லது கோடிக்கணக்கான பணம் கூட கிளைம் தொகையாக கிடைக்கலாம். அப்படி கிடைத்த அதிகமான தொகையை என்ன செய்வது என்று தெரியாமல் குடும்பத்தினர் தவறும் முதலீடுகள் மற்றும் செலவினங்களின் பணத்தை தொலைக்க வாய்ப்பு உள்ளது. எனவே டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது கிளைம் பே-அவுட் ஆப்ஷனை முன்கூட்டியே தேர்வு செய்வது நல்லது. அதாவது, பெரிய தொகையை ஒரே நேரத்தில் கையாளக்கூடிய திறமை உங்கள் குடும்பத்தினரிடம் இல்லை என்றால், லம்ப்சம் பே அவுட், மாதாந்திர வருமானத்தை பே-அவுட், லம்ப்சம் மாதாந்திர வருமானம், மாதாந்திர வருமானம் பே-அவுட் போன்ற க்ளைம் பே-அவுட் விருப்பங்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
- அதன் பிறகு டெர்ம் இன்சூரன்ஸில் ரைடர் என்பது ஒரு குறிப்பிட்ட நிகழ்வான கூடுதல் தொகை பெற உதவும் ஆப்ஷன் ஆகும். அதாவது பாலிஸ்தாரர்களுக்கு மோசமான நோய் இருந்தால் அவரது மரணத்திற்கு பிறகு அதற்காக கூடுதல் க்ளைம் தொகை கிடைக்கும். டிஎஸஏபிலிட்டி கிரிட்டிக்கல் நோய், ஆக்சிடென்டல் டெத் போன்ற பல வகையான ரைடர்கள் டெர்ம் இன்சூரன்ஸ் மூலம் கிடைக்கிறது. அதிலும் குறிப்பாக பல மாதங்கள் அல்லது வருட தாமதத்திற்கு பிறகு இன்சூரன்ஸ் பாலிசி வாங்குபவர்கள் தங்களது தேவையான குறிப்பிட்ட ரைடரை தேர்ந்தெடுப்பது குடும்பத்திற்கான இன்சூரன்ஸ் தொகையை அதிகரிக்க உதவும்.
- இதனையடுத்து அதிக முறை க்ளைம் செய்யக்கூடிய வசதியை கொண்ட இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து பாலசிதாரர் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்க வேண்டும். அதே நேரத்தில் குறைந்த முறை க்ளைம் செய்தாலும் அதிக அளவில் பாலிசி தொகையை வழங்கக்கூடிய இன்சூரன்ஸ் நிறுவனங்களும் உள்ளது. அதாவது க்ளைம் எண்ணிக்கை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இன்சூரன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்வதற்கு பதிலாக குறைந்த முறை க்ளைம் செய்தாலே அதிக தொகையை வழங்கக்கூடிய காப்பீடு முறையை தேர்ந்தெடுக்கலாம்.
- இறுதியாக இன்சூரன்ஸ் படிவத்தை நிரப்ப உறவினரையோ, நண்பரையோ அல்லது இன்சூரன்ஸ் முகவரையோ பயன்படுத்தாதீர்கள். ஏனென்றால் உங்கள் இன்சுரன்ஸ் படிவத்தை நீங்கள் நிரப்பினால் தான் அந்தத் திட்டம் பற்றி முழு விவரங்களை அறிய முடியும். எனவே உங்கள் காப்பீட்டு திட்டங்களின் முன்மொழிவு படிவத்தை கண்டிப்பாக நீங்கள் மட்டுமே நிரப்ப வேண்டும். இது நீங்கள் காப்பீடு திட்டத்தின் கொள்கை விவரங்களை அறிந்து கொள்ளவும் பாலிசி ஆவணங்களை சரி பார்க்கவும், க்ளைம் அமெண்ட் பற்றி தெரிந்து கொள்ளவும் உதவும்.