மலேசியா நாட்டின் முன்னாள் பிரதமரான மகாதீர் முகமதுக்கு(97) கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அவரது உடல்நிலை குறித்த கூடுதல் விபரங்கள் வெளியிடப்படவில்லை.
இந்த வருடத்தின் தொடக்கத்தில் ரத்த சிவப்பணுக்கள் பற்றாக்குறையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மகாதீர் முகமது பல முறை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்நாட்டில் 1981-2003 வரையிலும் 22 வருடங்கள் பிரதமராகயிருந்த மகாதீர்முகமது, 2018ம் ஆண்டு தன் 92 வயதில் மீண்டும் பிரதமரானது மூலம் உலகின் மிகவும் வயதானவர் என்ற பெருமையை பெற்றார். எனினும் கூட்டணி குழப்பங்கள் காரணமாக 2020ல் அவரது அரசு கவிழ்ந்து அவர் பதவியை இழந்தது குறிப்பிடத்தக்கது.