அமெரிக்காவில் சக மாணவர்களை மாணவன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் தன்னுடன் படித்து வந்த சக மாணவர்களை 15 வயது சிறுவன் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாஷிங்டனில் உள்ள ஐடி இஏ பப்ளிக் சார்ட்டர் பள்ளி அருகே காலை 10 மணி அளவில் 15 வயது சிறுவர் ஒருவர் தன்னுடன் பள்ளியில் படித்து வந்த இரண்டு மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு இருக்கின்றான். நேற்று நடைபெற்ற இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இதற்கிடையே நேற்று தென்கிழக்கு வாஷிங்டனில் உள்ள ஒரு கட்டிடத்திற்குள் மற்றொரு சிறுவன் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி சூடு வன்முறைகளுக்கு மத்தியில் அமெரிக்காவில் தாக்குதல் ஆயுதங்களை தடை செய்வதில் உறுதியாக இருப்பதாக கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அமெரிக்கா அதிபர் ஜோபைடன் கூறியுள்ளார். இந்த நிலையில் இந்த இரு வேறு துப்பாக்கி சூடு சம்பவங்களும் நடைபெற்றுள்ளது. மேலும் இந்த சம்பவங்கள் பற்றி போலீஸர் நடத்திய விசாரணையில் முன்னதாக டெட்ராய்ட் பகுதியில் கடந்த வார இறுதியில் அப்பாவி பொதுமக்கள் மீது மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.