உலகத்தில் எந்த நிகழ்வும் நடந்தாலும் அதனை தற்போது இணையதளத்தில் வெளியிட்டு வைரலாக வருகிறது. அந்த வீடியோ பாம்பு, பல்லி, விலங்கு, ஊர்வன ஆகிய பற்றிய வீடியோக்கள் மட்டுமில்லாமல் கொடூரமான பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனைப் போல ட்விட்டரில் நெஞ்சை நெகிழ வைக்கும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது மத்திய பிரதேசம் மாநிலத்தில் சியோன் மாவட்டத்தில் கன்ஹர்கான் கிராமத்தில் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட பீகாரை சேர்ந்த ராஜேஷ் தனது குடும்பத்தினரிடம் நடைபாதையில் வசதி வந்துள்ளார். அப்போது மனைவிக்கு வேறொரு ஆணுடன் தொடர்பு ஏற்பட்டதால் கை குழந்தையுடன் கணவரை விட்டுவிட்டு அவர் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
எனவே தாய் இல்லாத பிள்ளைக்கு தந்தையாக மாறிவிட்டார். குழந்தையை பராமரிப்பதற்கு யாரும் இல்லாத அவல நிலையை மத்திய பிரதேசத்திற்கு வந்த ராஜேஷ் தெரிந்த வேலைகளை செய்து உள்ளார். அதன் பிறகு சைக்கிள் ரிக்ஷா ஓட்டி குழந்தையின் பசியை போக்குக்கிறார். கைக்குழந்தையை தொளில் சுமந்து கொண்ட அவர், சைக்கிள் ரிக்ஷா ஓட்டுவது அனைவரின் நெஞ்சின் நெகிழ வைத்துள்ளது. ஒரு கையில் குழந்தை வைத்துக்கொண்டு மற்றொரு கையில் சைக்கிள் ரிக்ஷாவை ஓட்டுவது சர்க்கஸ் காட்சியைப் போல இருக்கிறது. இந்த காட்சியை வீடியோ எடுத்த ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ அனைவரின் நெஞ்சை நெகிழ வைத்துள்ளது. இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதாவது, அனைவரும் ரிக்ஷா ஓட்டுநரை ஆண் தேவதை என்று பாராட்டுகின்றனர். அதுமட்டுமில்லாமல் குழந்தைக்கு தாயாகவும் மாறிய தாயுமானவன் என்று கருத்து பதிவிட்டுள்ளனர் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.