தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் கேரளாவில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனிடையே கனமழை காரணமாக கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கேரளாவில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி திருவனந்தபுரம், கொல்லம், பட்டினம் திட்டா, ஆலப்புழா, கோட்டயம்,எர்ணாகுளம் மற்றும் இடுக்கி உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.