தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.இதனைத் தொடர்ந்து திமுக தமிழகத்தில் ஆட்சி அமைத்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்ட நிலையில் பல்வேறு வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார். அதன்படி பெண்களுக்கு இலவச பயணம் மற்றும் நகை கடன் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவி தொகை விரைவில் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சி அமைத்து 15 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் அந்த தொகை எப்போது வழங்கப்படும் என இல்லத்தரசிகள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.இந்நிலையில் நிதிநிலை சீரடைந்த பிறகு குடும்பத் தலைவிகளுக்கு மாத ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.