கடந்த வருடம் இந்தியாவில் நடந்த குற்றங்கள் என்ற தலைப்பில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய குற்ற ஆவண காப்பகம் ஒரு புள்ளிவிவர அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் 31,677 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளது. அதில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 86 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன.
அதில் ராஜஸ்தான் மாநிலத்தில் 6337 கற்பழிப்பு வழக்குகள், மத்திய பிரதேசம் 2947 வழக்குகள், மராட்டியம் 2496 வழக்குகள், உத்திரபிரதேசம் 2845 வழக்குகள்,டெல்லி 1250 ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. மேலும் பெண்களுக்கு எதிராக 4,28,278 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 49 குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.