கொரோனா காலகட்டத்திற்கு பின் தற்போதைய காலக்கட்டத்தில் இன்சூரன்சும், முதலீடும் நம்வாழ்வில் ஒரு அங்கமாகிவிட்டது. சம்பாதிப்பதில் ஒரு பகுதியை தனக்கு மற்றும் தன் குடும்ப எதிர்காலத்திற்காகச் சேமிப்பதில் பலர் ஆர்வம்காட்டி வருகின்றனர். இது ஒரு புத்திசாலித்தனமான நடவடிக்கையாக இருந்தாலும், இன்சூரன்ஸ் மற்றும் முதலீடு ஒரே பொருளைக் குறிக்கும் என பலர் தவறாக நினைக்கின்றனர். முதலீடும், காப்பீடும் ஒருவரது நிதிபாதுகாப்பின் முக்கியமான 2 தூண்கள் ஆகும். நல்ல முதலீடுகள் எதிர் கால வாழ்க்கையைச் சிறப்பாக வாழ நமக்கு உதவும்.
அதே சமயத்தில் காப்பீடுகள் என்பது ஒரு நபர் (அல்லது) குடும்பத்தை சில வகையான இழப்பில் இருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன் ஒருவர் நிதியைக் கொடுத்து வாங்கும் சேவை ஆகும். பினான்ஸ் பிரண்டான பிஸ்டம் நிறுவனத்தின் தலைவர் நிரவ் கர்கேரா கூறியதாவது, இரண்டிலும் சிறந்ததைக் கொண்டிருப்பது முக்கியம் என்றாலும், ஒருவரது வரையறுக்கப்பட்ட நிதிதிறன் இரண்டில் ஒன்றுக்கு முன்னுரிமை அளிக்கத் தூண்டும். இருப்பினும் பகுத்தறிவு மற்றும் பரிசீலனைகள் வாயிலாக இரண்டில் எது சிறந்தது என முடிவெடுப்பதை எளிதாக்க முடியும்.
முதலீடு, காப்பீடு ஆகிய இரண்டும் வழங்கும் பயன்கள் என்னென்ன?..
இவை இரண்டில் ஒன்றைத் தேர்வுசெய்வதற்கு முன் இரண்டும் அளிக்கும் முக்கிய பலன்களைப் புரிந்துகொள்வது அவசியம் என்கிறார் கர்கேரா. ஒரு முதலீடு என்பது பொதுவாக பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட நிதிநோக்கத்திற்காக எதிர்காலத்தில் வாங்கும் சக்தியை வழங்க முற்படுகிறது. அதுவே காப்பீடு என வரும்போது, டேர்ம் இன்ஷூரன்ஸ் என்ற பியூர் லைப் கவர் ப்ராடக்ட், ஒருவர் இறந்தால் குறிப்பிட்ட நபரின் நெருக்கமான குடும்ப உறுப்பினர்களுக்கான நிதி பங்களிப்பைத் திறம்பட மாற்றி அமைக்கிறது. அத்துடன் ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது மருத்துவச் செலவுகளுடன் தொடர்புடைய நிதிச்சுமையைக் குறைக்க உதவுகிறது.
அடுத்து ஒரு தனி நபரின் வாழ்க்கை இயக்கவியலின் சூழலை அடிப்படையாக வைத்து நோக்கங்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும். உதாரணமாக நிதி சார்ந்தவர்கள் இல்லாத ஒருவர் அகால மரணம் ஏற்பட்டால் வருமான மாற்றீட்டை உறுதிசெய்ய வேண்டிய அவசியமில்லை என நிபுணர்கள் கூறுகின்றனர். எனினும் எதிர்பாராத மருத்துவச் செலவுகள் ஏற்படும் பட்சத்தில் நிதிதலையீட்டிற்காகச் சுகாதாரக் காப்பீட்டிற்கு முற்றிலும் முன்னுரிமை அளித்து, நிதிப் பாதுகாப்புக்காக முதலீடு செய்ய முற்பட வேண்டும் என்கிறார்கள். குறிப்பிட்ட நபரைச் சார்ந்துள்ள குடும்பத்தில் எடுக்கப்படும் டேர்ம் இன்ஷூரன்ஸ் என்பது போதுமான ஆயுள் காப்பீட்டுடன் குடும்பத்திற்கான உடல் நலக் காப்பீட்டிற்கும் முன்னுரிமை வழங்குகிறது.
குடும்பத்தின் நிதி பாதுகாப்புக்காக முதலீடு செய்வது அர்த்தம் உள்ளதாக இருக்கிறது என்று நிரவ் கர்கேரா கூறினார். மற்றொரு புறம் ஏற்கனவே போதுமான அளவில் காப்பீடு செய்யப்பட்ட ஒருவருக்கு, முதலீடு செய்யப் பரிந்துரைக்க முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஆகவே முதலீடா (அல்லது) காப்பீடா என வரும்போது பதில் எளிமையானது. தற்போது உங்களுக்கு என்னதேவை மற்றும் எதிர் காலத்தில் என்ன தேவை என்பதைப் பொறுத்து நீங்கள் தீர்மானிக்கலாம். முதலீடுகள் உங்களது தற்போதைய மற்றும் எதிர்காலத்தைக் கவனித்துக்கொள்ளும். அதேசமயத்தில் நீண்டகாலத்திற்கு உங்களையும் உங்களது அன்புக்குரியவர்களையும் காப்பீடு கவனித்துக்கொள்ளும் என தெரிந்துக்கொள்ளுங்கள்.