சிங்கப்பூர் சரக்கு கப்பலான ‘அபினிட்டி வீ கப்பல்’ 64,000 டன் எரிபொருள் டேங்கர் கொன்டது. இந்த கப்பல் 2016 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இது 252 மீட்டர் நீளமும் 45 மீட்டர் அகலமும் கொண்டது. இந்நிலையில் போச்சுக்கலில் இருந்து புறப்பட்ட இந்த கப்பல் சவுதி அரேபியா செங்கடல் துறைமுகமான யான்பு வரை செல்ல திட்டமிடப்பட்ட பயணத்தில் எதிர்பாராத விதமாக இடையூறு ஏற்பட்டது. அதாவது நேற்று இரவு 7.15 மணிக்கு அபினிட்டி வி கப்பல் தொழில்நுட்பக் கோளாறால் கால்வாயில் 143 கிலோ மீட்டர் தொலைவில் கரை ஒதுங்கியது. இதனால் உலகின் 12% வர்த்தகத்துக்கு பயன்படுத்தப்படும் அந்த கால்வாயில் கப்பல் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டது.
இதனையடுத்து 5 க்கும் மேற்பட்ட இழுவை படகுகளை கொண்டு அந்த ராட்சத சரக்கு கப்பலை கரையில் இருந்து நகர்த்தி மீண்டும் மிதக்க வைக்கும் பணிகள் 5 மணி நேரமாக நடைபெற்றது. இந்த தீவிர மீட்பு பணியின் பலனாக சரக்கு கப்பல் கரையில் இருந்து நகர்த்தப்பட்டு மீண்டும் மிதக்க தொடங்கியது. மேலும் மாலையில் வந்த கப்பல் அங்கிருந்து அகற்றப்பட்ட பிறகு சூயஸ் கால்வாயில் முற்றிலும் இயல்பு நிலைக்கு திரும்பியது. இது குறித்து சூயஸ்கால்வாயின் ஆணையத்தின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஒசாமா ராபி கூறியது, கப்பலின் திசை மாற்றி பொறிமுறையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் அது கால்வாயின் கரையில் சிக்கியது. மேலும் கப்பலை காப்பாற்றுவதில் மீட்பு பிரிவுகள் மற்றும் இழுவைகள் வெற்றி பெற்று உள்ளனர் என்று தெரிவித்தார்.