Categories
பல்சுவை

பவர் எலெக்ட்ரானிக்ஸ் மின் சாதங்கள்…. புது பிளான் போடும் ரிலையன்ஸ் நிறுவனம்….!!!!!

பவர் எலெக்ட்ரானிக்ஸ் மின்சாதங்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளை உருவாக்க ரிலையன்ஸ் நிறுவனமானது திட்டமிட்டு இருக்கிறது. சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பசுமை ஆற்றலை உற்பத்திசெய்யும் மின்சாதனங்களுக்கு தேவையான பவர் எலெக்ட்ரானிக்ஸ் உபகரணங்களை தயாரிக்க இந்த முன்னெடுப்பு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது பசுமை ஆற்றலை தயாரிப்பதற்கு தேவையான உபகரணங்களை குறைந்த விலையிலும் அதிகமான நம்பகத்தன்மையிலும் உருவாக்க பயன்படும்.

இதில் பசுமை ஆற்றல் என்பது சுற்றுச் சூழலை பாதிக்காமல் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது என பொருள்படும். ரிலையன்ஸ் நிறுவனத்தின் 45-வதுவருட பொதுக் கூட்ட மாநாட்டில் அதன் தலைவர் முகேஷ் அம்பானி உரை ஆற்றினார். அப்போது பேசிய அவர் “பவர் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் மென் பொருள் அமைப்புகளை வடிவமைப்பதிலும், அதை தயாரிப்பதிலும் நாங்கள் முனைப்புடன் இருக்கிறோம்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தொலை தொடர்பு, க்ளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் ஐஓடி தளங்களை மேம்படுத்த இந்த முன்னெடுப்பு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்” என கூறினார். இதற்கென உலகளவில் முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு, குறைந்த செலவில் உலக தரமிக்க பாதுகாப்பான மின்சாதனங்களை உருவாக்குவோம் என கூறினார். சூரியஒளி மின்சாரம் மட்டுமல்லாது, பயோஎனர்ஜி, காற்றாலை மின்உற்பத்தி ஆகியவற்றிலும் ரிலையன்ஸ் நிறுவனம் முன்னேற்றமடைந்து வருகிறது என அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

Categories

Tech |