Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

2 போட்டிகளில் வென்றாலும்….. “ரோஹித், ராகுல் தொடக்கம் சரியில்லை”….. அடுத்த போட்டியில் சரி செய்வார்களா?

டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா, கேஎல் ராகுல்  மற்றும் வேகப்பந்து பந்துவீச்சாளர்கள் சொதப்பி வருவது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ஆசிய கோப்பையின் இந்திய அணி தனது முதல் போட்டியில் கடைசி ஓவரில் த்ரில்லில் பாகிஸ்தானை வீழ்த்திய பிறகு, ரோஹித் சர்மா தலைமையிலான அணி ஹாங்காங்கை 40 ரன்கள் வித்தியாசத்தில் நேற்று வீழ்த்தியது. இந்திய அணி இன்னும் ஆசிய தொடரில் தோற்கடிக்கப்படவில்லை என்றாலும், மீதமுள்ள போட்டிகள் மற்றும் டி 20 உலகக் கோப்பைக்கு முன்னதாக அணியை வலுப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. ஏனெனில் ஹர்திக் பாண்டியா ஆல்-ரவுண்டராக சிறப்பாக ஆடி வருகிறார். அவரை பற்றி பிரச்சினையே இல்லை.. மேலும் விராட் கோலி தற்போது முன்னேறி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். ஆம்,  இரண்டு ஆட்டங்களில் (பாகிஸ்தான், ஹாங்காங்) சிறப்பாக ஆடியது மிகப்பெரிய ப்ளஸ் ஆகும். அதே நேரத்தில் இந்திய ஓப்பனிங் தொடர்ந்து சொதப்பி வருகிறது.

ரோஹித் தொடக்கத்தை மாற்றவில்லை:

இந்திய கேப்டன் ரோகித் சர்மா சரியான தொடக்கத்தை பெறவில்லை என்பது அல்ல, பிரச்சனை என்னவென்றால், அவர் அவற்றை பெரிய ஸ்கோராக மாற்றவில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக 18 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹாங்காங்கிற்கு எதிராக அவர் மீண்டும் ஒரு தொடக்கத்தைப் பெற்றார். 13 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். அவர் ஒயிட்-பால் கிரிக்கெட்டில் முக்கிய வீரர்களில் ஒருவர், எனவே அவர் மீண்டும் பெரிய ரன்களை எடுப்பது அணிக்கு மிக முக்கியமானது. அடுத்த போட்டியில் அதனை சரி செய்வர் என்று நம்பப்படுகிறது.

கே.எல். ராகுலின் ஃபார்ம் :

இந்திய தொடக்க ஆட்டக்காரர் மிகவும் மதிப்பிடப்பட்டவர், அதற்குக் காரணம் அவரிடம் உள்ள அபாரமான ஆற்றல்தான். துரதிர்ஷ்டவசமாக, தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பையில் மீண்டும் அணிக்கு திரும்பிய பிறகு அவர் ரன்கள் எடுக்கமுடியாமல் திணறுகிறார். நேற்றைய போட்டில் கூட கே.எல் ராகுல் ஆமை வேகத்தில் 39 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து திணறிக்கொண்டிருந்தார்.. ஆசிய கோப்பைக்கு முன்னதாக கே.எல் ராகுல் ஜிம்பாப்வே  தொடரில் மட்டுமே ஆடி இருக்கிறார்.. அதிலும் சரியாக ஓபனிங் செய்யவில்லை.. தற்போது ஆசிய கோப்பையின் முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக டக் அவுட் ஆகிய நிலையில், நேற்றைய போட்டியிலும் பதட்டத்துடன் ஆடி வருவது இந்திய அணிக்குப் பின்னடைவாக இருக்கிறது. எனவே அடுத்த போட்டியில் அவர் இதனை மாற்றி அமைக்க வேண்டும் இல்லையெனில் உலக டி20 உலக கோப்பையில் இடம் பெறுவது கேள்விக்குறியாகிவிடும்

வேகப்பந்து வீச்சாளர்கள் ரன் கசிவு:

வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் டி20 ஸ்பெஷலிஸ்ட் ஹர்ஷல் படேல் இல்லாத நிலையில்,  அர்ஷ்தீப் சிங் மற்றும் அவேஷ் கான் ஆகியோர் நேற்று நடந்த போட்டியில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்துள்ளனர்.. ஆவேஷ் கான் 4 ஓவர்கள் வீசி 53 ரன்களும், அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்கள் வீசி 44 ரன்களும் கொடுத்திருக்கின்றனர்.. இவர்களும் பந்துவீச்சை சரி செய்ய வேண்டும்.. இதுவரையில் புவனேஷ்வர் குமார் சிறப்பாக பந்து வீசி வருகிறார். டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக இவையனைத்தும் சரி செய்யப்பட வேண்டும்.

ஏனெனில் இந்த ஆசிய கோப்பை தொடரை வைத்து தான் பெரும்பாலான வீரர்கள் டி20 உலக கோப்பைக்கு தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். ஒருவேளை இந்த தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள் சொதப்பும் பட்சத்தில் வேறு வீரர்கள் இடம் பெற வாய்ப்பு இருக்கிறது..

ஆசிய கோப்பை தொடரில் இரண்டு ஆட்டங்களில் இரண்டு வெற்றிகளுடன் ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |