Categories
மாநில செய்திகள்

“நீட் தேர்வை பார்த்து பயமில்லை” தமிழகம் கல்வியில் தலைசிறந்து விளங்குகிறது…. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்….!!!!

தமிழகம் கல்வியல் மிகச்சிறந்த மாநிலமாக விளங்குகிறது என்று முதல்வர் கூறியுள்ளார்.

சென்னையில் உள்ள கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் 22 துணை வேந்தர்கள் கலந்து கொண்ட மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் உயர் கல்வியை மேம்படுத்துவது, மாநிலக் கல்விக் கொள்கை, பாடத்திட்டங்களை மேம்படுத்துவது, புதிய கல்விக் கொள்கை மற்றும் உயர் கல்வி துறையின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த மாநாட்டின் போது முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது, தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்காக வருடந்தோறும் 3000 கோடி நிதி ஒதுக்கப்படுவதால் தான் பல்கலைக்கழகங்கள் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. தமிழகம் தான் கல்வியில் மிகச் சிறந்த மாநிலமாக  திகழ்கிறது.

அனைவருக்கும் கல்வி, கல்விக்கு ஏற்ற வேலை வாய்ப்பு போன்றவை தான் திராவிட கட்சியின் கொள்கைகள். வேலை வாய்ப்புகளை உருவாக்கி தருவது மட்டுமே உயர் கல்வியின் நோக்கம் கிடையாது. இப்போதும் நாம் உயர்ந்த இடத்தில் தான் இருக்கிறோம் என்பதுதான் உயர் கல்வியின் நோக்கம். 51% மாணவர் சேர்க்கையால் தமிழகம் உயர்நிலைக் கல்வியில் முதலிடத்தில் இருக்கிறது. என்ஐஆர்எஃப் தரவரிசையிலும் தமிழகம் தான் முதலிடத்தில் இருக்கிறது. கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சி, உள்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றில் தமிழக பல்கலைக்கழகங்கள் சிறப்பாக இருக்கிறது. எண்ணிக்கை மற்றும் தரம் போன்றவற்றிலும் என்ஐஆர்எஃப் தரவரிசை பட்டியலில் தமிழகம் முதல் இடத்தில் இருப்பதால், வருகிற ஆண்டுகளில் தரவரிசை பட்டியலில் அதிக உயர்கல்வி நிறுவனங்கள் இடம் பெற வேண்டும்.

உயர்கல்வியில் மாணவர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைவருக்கும் கல்வி, உயர்கல்வி, ஆராய்ச்சி கல்வி என்பதே இலக்கு. ஆராய்ச்சிகள் மற்றும் கண்டுபிடிப்பை ஊக்கப்படுத்துவதற்காக வருடம் தோறும் 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதற்காக  முதலமைச்சர் ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டம் தொடங்கப்படும். பல்கலைக்கழகங்களுக்கு வேண்டிய உதவிகளை அரசு வழங்குவதற்கு தயாராக இருக்கிறது. எனவே மாநில அரசின் கொள்கைகளுக்கு ஏற்பவே பல்கலைக்கழகங்கள் செயல்படுவதோடு, மாநில அரசின் கொள்கை முடிவுகளை பிரதிபலிக்கும் வண்ணமாகவும் திகழ வேண்டும்.

நீட் தேர்வை பார்த்து நாம் பயப்படவில்லை. அது உயர்கல்விக்கு தடையாக இருக்கும் என்பதால் தான் நீட் தேர்வை எதிர்த்துக் கொண்டிருக்கிறோம். புதிய கல்விக் கொள்கையையும் அரசு எதிர்க்கிறது. பல்கலைக்கழகங்களில் புதிய பாடங்களை தொடங்கி, மாணவர்களின் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும். உயர்கல்வியின் பொற்காலமாக இந்த ஆட்சி இருக்க வேண்டும் என்று கூறினார்.

Categories

Tech |