உலகப் புகழ்பெற்ற ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களின் வரிசையில் 25ஆவது திரைப்படமாக வெளிவரவிருக்கும் ’நோ டைம் டு டை’-இன் தீம் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. அமெரிக்க பாப் இசை உலகின் பிரபலம் பில்லி ஈலிஷ், இந்தத் தீம் பாடலுக்கு இசையமைத்துள்ளார்.
உலகம் முழுவதுமுள்ள ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளைக் கிளப்பியுள்ள இந்தத் திரைப்படத்தில் புகழ்பெற்ற பிரிட்டிஷ் உளவாளி பாண்டாக மீண்டும் டேனியல் க்ரெய்க் தோன்றவுள்ளார். மேலும் ரால்ஃப் ஃபியன்ஸ், பென் விஷா, நவோமி ஹாரிஸ் உள்ளிட்ட அனைவரும் இந்தப் பாகத்திலும் மீண்டும் தோன்றவுள்ளனர். கேரி ஃபுகுனகா இயக்கும் இத்திரைப்படம் வருகிற ஏப்ரல் இரண்டாம் தேதி திரைக்கு வரவுள்ளது.
Here is the new title song for #NoTimeToDie by Billie Eilish https://t.co/IXc6fqxtAz
— MI6 HQ (@jamesbondlive) February 14, 2020