Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMKஅரசை கவுக்க நினைச்ச ஓபிஎஸ்…! மகன் கொடுத்த சர்டிபிகேட் .. பரபரப்பை கிளப்பிய ஜெயக்குமார் ..!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓபிஎஸ்யை பொறுத்தவரை அவர் நம்பிக்கை கூறியவரா? அவரை யார் அடையாளம் காட்டினார் ? அம்மா வந்து பெரியகுளத்துல டிடிவியை அன்னைக்கு எம்.பியாக  நிக்க வைக்கலன்னா அவர் யாருன்னே தெரிஞ்சிருக்காது. அன்னைக்கு டிடிவி காலில் விழுந்து, அவருக்கு கோடான கோடி நமஸ்காரம் பண்ணிட்டு,  அவருக்கு துரோகம்.

அந்த குடும்பத்துக்கு துரோகம்,  எல்லாத்துக்கும் துரோகம்,  இப்போ கட்சிக்கு  துரோகம். கட்சிக்கு துரோகம் எப்படி ? அம்மாவுடைய அரசு வரக்கூடாதுன்னு எதிர்த்து ஓட்டி போட்டீங்க. எங்க ஓட்டு போட்டீங்க ? சட்டமன்றத்தில் எதிர்த்து ஓட்டு போட்டிங்க. யாராவது செய்வார்களா ?  கஷ்டப்பட்டு உருவாக்குனாங்க 2016ல. 2016இல் உருவாக்கின அரசை எதிர்த்து ஓட்டு போட்டிங்க, எதிர்த்து ஓட்டு  போட்டது மட்டுமல்லாமல்,  அன்னைக்கு டிடிவியிடம் போயிட்டு முதலமைச்சராக்குங்க என  யார் கேட்டது ? இவர்தான் கேட்டார்.

அப்ப  ஆசை இல்லையா அது. அவங்க பையன் ரவீந்தரநாத் போய் ஸ்டாலினை பாக்குறாரு. யாராவது போய் பார்ப்பாங்களா சொல்லுங்க முக.ஸ்டாலின் அர்ப்பணிப்போடு செயல்படுகிறார் என்று ஓபிஎஸ் மகன் சர்டிபிகேட் கொடுக்கிறார் என விமர்சித்தார்.

Categories

Tech |