டெல்லி சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு வெற்றி பெற்றுள்ளது.
ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்க பாஜக பல இடையூறுகளை செய்வதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த சில தினங்களுக்கு முன்பு குற்றம் சாட்டியிருந்தார்.. அதேபோல மணிஷ் சிசோடியா பதவி விலக வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியினர் கோஷங்களை எழுப்பி வந்தனர்.. இந்த நிலையில் டெல்லி சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டம் இன்று கூடியது. அப்போது நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு வெற்றி பெற்றிருக்கிறது.
ஆம் ஆத்மிக்கு 62 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் 58 பேர் கலந்து கொண்டனர். 4 பேர் பங்கேற்கவில்லை. பாஜக விலை பேசி வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.