ஜார்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூர் மாவட்டத்தில் ஆதார் அட்டை வடிவில் விநாயகர் சதுர்த்தி பந்தல் அமைக்கப்பட்டுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. பெரும்பாலும் பல மாநிலங்களில் விநாயகர் சிலை 3 முதல் 5 நாட்கள் வரை வைக்கப்பட்டிருப்பார்கள். அதுமட்டுமில்லாமல் வித்தியாச வித்தியாசமாக கலர் கலராக விநாயகர் சிலை வைப்பது வழக்கம். ஆனால் இங்கு புது முயற்சியாக விநாயகருக்கு ஒரு பிரத்தியேக ஆதார் அட்டை உருவாக்கப்பட்டுள்ளது.
அது எங்கு என்றால் ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஜெட்பூர் மாவட்டத்தில் ஆதார் அட்டை வடிவில் விநாயகர் சதுர்த்தி பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஆதார் அட்டையில் உள்ள விநாயகர் பெருமாளின் முகவரி கைலாசம் என்றும், பிறந்த தேதி ஆறாம் நூற்றாண்டு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் அவரின் தந்தையின் பெயர் மகாதேவ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முகவரியில் கைலாச மலை, மேல் தளம், மானசரோவர் ஏரி அருகில், கைலாஷ், பின்கோடு-000001 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை புகைப்படம் எடுத்த பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர இந்த பந்தல் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.