செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே .பழனிசாமி, தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக சட்ட ஒழுங்கு சீர்குலைஞ்சு போச்சு. எப்ப பாத்தாலும் பாலியல் வன்கொடுமை நடந்து கொண்டிருக்கிறது. எல்லாமே உங்க செய்திகளை பார்க்குறதுனால சொல்றேன், உங்க ஊடகத்திலும், பத்திரிகைல வர செய்தியை பார்த்து தான் உங்கள் முன் பேட்டி கொண்டிருக்கின்றேன். இன்றைக்கு கூட பத்திரிகையில் ஒரு செய்தியை பார்த்தேன். ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளான். திருமணத்துக்கு போகும்போது ஒரு பெண்மணி இடம் இருந்து செயினை பறித்துள்ளார்.
அவரை புடித்து ஒப்படைக்கும் போது, பொறியாளராக படித்தவர், சாதாரண ஆளு இல்லை. படித்திருக்கிறார்கள், பொறியாளராக இருக்கிறார். வேலையில் இருந்தவர். ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு போயி கடன் வாங்கி செலவு செஞ்சுட்டாரு. கடனை அடைப்பதற்காக திருடி இருக்கிறார். அப்படிப்பட்ட ஒரு கீழ்த்தனமான நிலைக்கு இன்னைக்கு மாணவர்களும், இளைஞர்களும் தள்ளப்பட்டு விட்டார்கள் என நான் பலமுறை சட்டமன்றத்தில் பேசியாச்சு, ஊடகத்தில் பேசியாச்சு.
இதை முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேட்டா… இதுக்கு கருத்து கேட்பு கூட்டம் நடத்துறாரு. சூதாட்டத்திற்கு யாராவது கருத்து கேட்பு கூட்டத்தை நடத்துவாங்களா? உலகத்திலேயே எங்கேயும் கிடையாது. ஆக இந்த முதலமைச்சர் எது நல்லது ? எது கெட்டதுன்னு ? எதையுமே தெரியாத ஒரு முதலமைச்சர் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்றார்.
இன்னைக்கு ஆன்லைன் ரம்மி சூதாட்டதால் பல இளைஞர்கள், மாணவர்கள் உயிரிழக்கிறார்கள். அதோடு பொருளை இழந்து திருடுகின்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள். இது வேதனையான ஒரு சம்பவம். தமிழகத்தில் இருக்கின்ற ஒட்டுமொத்த அத்தனை எதிர்க்கட்சிகளும் இந்த ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆய்வு கூட்டம் நடத்துனார், ஆய்வுக்கூட்டத்தில் என்ன ஆச்சுன்னு தெரியல ? ஏன்னா தினமும் துட்டு வந்துகிட்டு இருக்கு.
அதனால அதை நிறுத்தவே மாட்டாங்க. யாரு குரல் கொடுத்தாலும் ஆன்லைன் ரம்மியை நிறுத்துவது கடினம். இனியாவது இந்த விடியா அரசாங்கம்…. கும்பகர்ணன் போல் தூங்காமல் மக்களோடு பிரச்சனையை எண்ணி, இளைஞர்கள் – மாணவர்கள் நலம் கருதி விரைவாக ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய தனி சட்டத்தை கொண்டு வர வேண்டும், நிறைவேற்ற வேண்டும் என்று ஊடகத்தின் வாயிலாக கேட்டுக் கொண்டிருக்கின்றது என தெரிவித்தார்.