பெண்களுக்கு பொதுவாக மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் மற்றும் கர்ப்பபை வாய் புற்றுநோய் போன்றவைகள் ஏற்படும். இதில் கர்ப்பப்பை வாய் புற்று நோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து விட்டால் அந்த நோயை முழுமையாக குணப்படுத்த முடியும். அதோடு கர்ப்பபை வாயில் ஏற்படும் புற்று நோய்களை தடுப்பதற்கு இந்தியாவில் வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் போடப்படுகிறது. இந்த தடுப்பூசிகளை இந்தியாவில் தயாரிப்பதற்காக சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் நிறுவனத்திற்கு மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி கொடுத்தது.
இந்த தடுப்பூசிகள் தயார் செய்யப்பட்டு கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் சோதனை தொடங்கியது. இந்நிலையில் தடுப்பூசி காண மூன்று கட்ட சோதனைகளும் வெற்றிகரமாக நிறைவடைந்ததால் கூடிய விரைவில் கர்ப்பப்பை வாய் புற்று நோய் காண தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை இந்தியாவில் அறிமுகப்படுத்துவது மிகவும் பெருமையான விஷயம் என்று டாக்டர் என்.கே அரோரா கூறியுள்ளார். மேலும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசி இன்று அறிமுகப்படுத்தபட்டுள்ளது.