தருமபுரி அருகே அரசு வேலை பார்க்கும் பெண்ணிடம் இருந்து செயின் பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் பிடமநெறி பகுதியை சேர்ந்தவர் கிரிஜா சங்கரி. இவர் அழகாபுரி பகுதியில் உள்ள வட்டார அலுவலகத்தில் எழுத்தாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அழகாபுரியில் இருந்து தனது வீட்டிற்கு அவரது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து கழுத்திலிருந்த சங்கிலியை பறித்துச் சென்றனர்.
இதில் அவருக்கு கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டது. செயினை பறித்த அந்த சமயத்திலேயே அவர் கூச்சலிட்ட போதிலும் அக்கம் பக்கத்தினர் விரைந்து ஓடி வருவதற்குள் மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் சிட்டாய் பறந்து விட்டனர். இது குறித்து அவர் தர்மபுரி காவல் நிலையத்தில் புகார் அளிக்க புகாரை ஏற்ற அதிகாரிகள் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.