EPFO ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால் அவரது குடும்பத்தினர் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம்.
1995ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் தொழிலாளர் பென்ஷன் திட்டம் தொடங்கப்பட்டது. PF கணக்கு தொடங்க தகுதியானவர்கள் அனைவரும் இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள். இந்த திட்டத்தின் மூலமாக பணி ஓய்வுக்கு பின்னரும் நிலையான வருமானம் கிடைப்பது மட்டுமில்லாமல் ஓய்வூதியதாரர் இறந்து விட்டால் கணவன், மனைவி, பிள்ளைகளுக்கும் அந்த பென்ஷன் கிடைக்கும். தொழிலாளர் பென்ஷன் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற்று வந்த ஓய்வூதியதாரர் ஒருவேளை இறந்து விட்டால் அவரது குடும்பத்தினர் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
முதலில் என்னென்ன ஆவணங்கள் தேவை என்றால் ஓய்வூதியதாரரின் இறப்புச் சான்றிதழ், பயனாளிகளின் ஆதார் கார்டு நகல், பயனாளிகளின் வங்கி கணக்கு விவரம், பயனாளிகளின் வங்கி பாஸ் புக், பயனாளிகளின் 18 வயதுக்கு கீழானவர்கள் இருந்தால் அவர்களின் வயது சான்றிதழ்.
EPFO விதிமுறைப்படி ஓய்வூதியதாரர் இறந்து விட்டால் அவரின் கணவன் அல்லது மனைவிக்கு பென்ஷன் தொகையில் 75 சதவீதம் ஓய்வூதியமாக கிடைக்கும். அதன்படி மாதம் 750 ரூபாய் வழங்கப்படும். தாய் தந்தை இருவரும் இல்லாத பிள்ளைகளுக்கு 25 வயது வரை பென்ஷன் கிடைக்கும். மேலும் மாற்றுத்திறனாளி பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் பென்ஷன் கிடைக்கும்.