சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில் இளம் பெண் நீதிமன்றத்தில் தனது வேதனையான அனுபவத்தை சாட்சியமளித்துள்ளார்.
சிங்கப்பூரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது காதலனுடன் சிங்கப்பூர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு வாரியத்தின் வீடுகளில் வாடகைக்கு வசித்து வந்துள்ளார். அந்த வீட்டின் 38 வயதான உரிமையாளர் காதல் ஜோடியிடம் இந்த வீடுகள் உள்ள பகுதியில் பேய்கள் நடமாடுவதாகவும் தாங்கள் அடிக்கடி தாய்லாந்து சென்று அதற்கு மாந்திரீக பரிகாரம் செய்து வருவதாக கூறியுள்ளார். மேலும் அந்த காதல் ஜோடிக்கு அடிக்கடி மது விருந்தும் வைத்துள்ளார். இரவு நேரத்தில் காதலனும் காதலியும் நிர்வாணமாக தூங்குவது வாடிக்கை. அப்படி அவர்கள் தூங்கும் போது அந்த இளம் பெண்ணுக்கு ஒரு உருவம் முத்தம் கொடுத்துள்ளது. மார்பையும் உடலையும் தொட்டுள்ளது . முதலில் காதலன் தான் என நினைத்துள்ளார். பின்பு அவரது காதலனுக்கு வழுக்கை தலை ஆனால் அந்த உருவத்திற்கு முடி அதிகம் இருந்துள்ளது. இப்படி சுமார் 9 மாதங்கள் தொடர்ந்து நடந்துள்ளது. இது பேய்களின் வேலையாக இருக்குமோ என எண்ணியுள்ளனர்.
பேய்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக தீவிரமாக எடுத்துக் கொண்ட அவர்கள் உடனடியாக காவல்துறையினரை அழைக்கவில்லை அதற்கு பதிலாக படுக்கையறையில் சிசிடிவி கேமிராவை பொருத்தியுள்ளனர். பின்னர் அவர்கள் நிர்வாணமாக தூங்குவதை நிறுத்தியுள்ளனர். அப்போது தான் உண்மை என்னவென்று தெரிய வந்துள்ளது. இது குறித்த வழக்கு சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது அப்பொழுது அந்த பெண் கூறியதாவது, “அந்த பெண் நீதிமன்றத்தில் தனது வேதனையான அனுபவத்தை சாட்சியமளித்தார். சிங்கப்பூர் நீதிமன்றத்தில் பேசிய அவர், தனது மார்பிலும், தொடையிலும் அந்த உருவம் தொட்டதாகவும், ஆனால் அந்த நேரத்தில் ஒரு “இருண்ட நிழலை” தான் பார்க்க முடிந்தது.
தனது காதலன் குளித்துவிட்டு அறைக்குத் திரும்புவதற்கு முன்பு, சுமார் 10 நிமிடங்களுக்கு இந்த முழு விஷயமும் நீடித்ததாக அந்தப் பெண் குற்றம் சாட்டினார். வீட்டில் இரண்டு ஆண்கள் மட்டுமே இருந்ததால், அது ஒரு நிழலை மட்டுமே பார்க்க முடிந்ததால் அது பேயாக இருக்குமோ என்று சந்தேகம் இருந்தது. இதனை தொடர்ந்து படுக்கையறையில் சிசிடிவி பொருத்தினோம்” என கூறியுள்ளார். மேலும் அந்த சிசிடிவி காட்சியை கோர்ட்டில் போட்டு காட்டினார். ஒரு நாள் நள்ளிரவு 12.56 மணிக்குப் பிடிக்கப்பட்ட காட்சிகள் இளம்பெண் படுக்கையில் அமர்ந்திருப்பதைக் காட்டியது, அப்போது ஒரு கை கதவைச் சுற்றி வந்து விளக்கை அணைத்தது. பின்பு கேமரா இரவு பார்வைக்கு மாறுகின்றது. வீட்டு உரிமையாளர் அறைக்குள் நுழைந்து அந்த பெண்ணை தொடுவதைக் காணலாம் தொடர்ந்து முத்தமிடுகின்றார்.ஆனால் இளம் பெண் முழுமையாக தூங்கவில்லை உடனடியாக எழுந்து வீட்டு உரிமையாளரை கையும் களவுமாக பிடித்துள்ளார்.