Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பல லட்ச ரூபாய் மோசடி…. இளம்பெண்ணை நம்பி ஏமார்ந்த 19 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

வீடு வாங்கி தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி செய்த இளம்பெண்ணை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

சமீப காலமாக ஆன்லைன் மோசடி, போலி பத்திரங்களை பயன்படுத்தி மோசடி இட மோசடி, வங்கியில் இருந்து பேசுவது போல நடித்து மர்ம நபர் பண மோசடி செய்வது போன்றவை நடைபெறுகிறது. இதனை தடுக்கும் பொருட்டு போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் சோழபுரம் பகுதியில் ஞானசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அருணா(36) என்ற மனைவி உள்ளார்.

இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் சுந்தரி என்பவர் மூலம் அதே பகுதியைச் சேர்ந்த பிரியா(30) என்பவர் அருணாவுக்கு அறிமுகம் ஆகியுள்ளார். அப்போது தான் குடிசை மாற்று வாரியத்தில் வேலை பார்ப்பதாக பிரியா கூறியுள்ளார். மேலும் அரசு ஒதுக்கும் வீட்டை வாங்கி தருவதாகவும், பிரியா அருணாவிடம் ஆசை வார்த்தைகள் கூறி முதற்கட்டமாக 30 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளார். இதனை அடுத்து வீடு கிடைத்து விட்டதாகவும், அடுத்த கட்டமாக 6 லட்ச ரூபாய் தர வேண்டும் எனவும் பிரியா கேட்டுள்ளார்.

இதனை நம்பி 6 லட்ச ரூபாய் பணத்தை அருணா கொடுத்துள்ளார். இதே போல் 18 பேரிடம் வீடு வாங்கி தருவதாக கூறி பிரியா 30 லட்சம் வரை வாங்கி, வீட்டை கொடுக்காமல் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்டவர்கள் அம்பத்தூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பிரியாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |