சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகளுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. மாணவிகள் பள்ளியில் வைத்தோ வெளியிடங்களில் வைத்தோ பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். சிலர் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து தனியாக இருக்கும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளிக்கின்றனர். இதனை கண்டிக்கும் பொருட்டு போலீசார் குற்றவாளிகளை கைது செய்து தண்டனை வாங்கி கொடுக்கின்றனர்.
அந்த வகையில் சென்னை மாவட்டத்தில் உள்ள பெரும்பாக்கம் பகுதியில் 33 வயதுடைய பெண் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக இந்த பெண் கணவரை பிரிந்து மகேஷ் குமார் என்பவருடன் வாழ்ந்து வருகிறார். பின்னர் மகேஷ் குமாரகுமாரை அந்த பெண் திருமணம் செய்து கொண்டார். இவர்களுடன் முதல் கணவர் மூலமாக பிறந்த 7 வயதுடைய சிறுமி இருந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த பெண் வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு மகேஷ் குமார் பாலியல் தொந்தரவு அளித்ததால் சிறுமிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து வீட்டிற்கு வந்த பெண் தனது மகள் வலியால் துடிப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் மகேஷ் குமார் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தது உறுதியானது. இதுகுறித்து அந்த பெண் சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் மகேஷ் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.