சீனா மனித உரிமை மீறல்களை செய்துள்ளதாக ஐநா குற்றம் சாட்டியுள்ளது.
ஐநா மனித உரிமைகள் ஆணையம் சீனா மனித உரிமைகளுக்கு எதிராக செய்துள்ள குற்றங்கள் தொடர்பான பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. அதில் சீன நாட்டில் உள்ள ஜின்ஜியாங் பகுதியில் உய்குர்கள் மற்றும் முஸ்லிம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த சிறுபான்மை மக்கள் மீது சீனா கடுமையான மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பான தகவல்கள் கடந்த 2017-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து ஐநா சபையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அதாவது சீன அரசு பயங்கரவாதம் மற்றும் தீவிரவாத கொள்கைகளை ஒழிப்பதாக கூறி சிறுபான்மையின மக்களை பல்வேறு விதமான இன்னல்களுக்கு ஆளாகி அவர்களை கொடுமைப்படுத்தியுள்ளனர். ஐநா மனித உரிமைகள் மீறல் ஆணையத்தின் தலைவர் மிச்சேல் கடந்த மாதம் சீனாவுக்கு சென்று ஆய்வு செய்தார். அந்த ஆய்வுக்கு பிறகு தான் மிச்சேல் சீனா மனித உரிமை மீறலில் ஈடுபடுவது உண்மை எனக் கூறி அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்.
இந்நிலையில் சீனா சிறுபான்மையினருக்கு எதிராக பாலியல் மற்றும் பாலின அடிப்படையில் ஆன வன்முறைகள், சிறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்துதல், கொடுமையான சித்திரவதை போன்றவற்றை செய்வதாக மிச்சேல் கூறியுள்ளார். ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் பணியில் இருந்து ஓய்வு பெறும் சமயத்தில் சீனா மீது பகிர் குற்றச்சாட்டை கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன்பிறகு சிறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தும் சிறுபான்மை இன மக்களை உடனடியாக விடுதலை செய்ய சீன அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஐநா வலியுறுத்தியுள்ளது.
ஆனால் ஐநாவின் மனித உரிமைகள் ஆணையத்தின் குற்றச்சாட்டுகளை சீனா பகிரங்கமாக மறுத்துள்ளது. அதாவது ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள அதிகாரிகள் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் தான் தங்களுடைய கடமையை செய்து கொண்டு இருக்கிறார்கள். சீனாவின் பயங்கரவாத அமைப்பை ஒழிப்பது தொடர்பான நடவடிக்கைகள் எந்த விதத்திலும் சிறுபான்மையினர் மக்களை பாதிக்கவில்லை என்றும் சீன அரசு கூறியுள்ளது.