Categories
மாநில செய்திகள்

2 வீலர், 4 வீலர் வாகன ஓட்டிகளே…. கட்டணம் உயர்வு….. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணத்தை மறு நிர்ணயம் செய்ய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.திரையரங்கு உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில் மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 20 ரூபாய் டூவீலர்களுக்கு 10 ரூபாய் கட்டணமாக வசூலிக்க கடந்த 2017 ஆம் ஆண்டு அரசு உத்தரவை ரத்து செய்து புதிய கட்டணத்தை நிர்ணயிக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்ரமணியன் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, சென்னை மாநகராட்சியில் உள்ள திரையரங்குகளுக்கு அரசு நிர்ணயித்த கட்டணம் குறைவாக உள்ளது என கருத்து தெரிவித்து, 2017-ம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். இதனால் பைக் 20 ரூபாய்,ஆட்டோ 35 ரூபாய் மற்றும் கார் 50 ரூபாய் வரை பார்க்கிங் கட்டணம் உயர்த்தப்படலாம்.

Categories

Tech |