பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சவளக்காரன் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த 2 நாட்களாக மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் நிரப்ப முடியாமல் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் சீரான மின்விநியோகம் வழங்க வேண்டும், குடிநீர் கட்டுப்பாட்டை போக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மன்னார்குடி-திருவாரூர் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால் பகுதியில் 2 1/2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.