ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 தற்போது பல்வேறு பிரச்சினைகளை தாண்டி வெற்றிகரமாக மீண்டும் தொடங்கப்பட்டிருக்கிறது. ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இந்த திரைப்படம் சில வருடங்களாக வெவ்வேறு பிரச்சினைகளை சந்தித்து வந்துள்ளது. அதனாலயே படம் வெளிவருமா என்னும் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் தற்போது அதற்கெல்லாம் ஒரு விடிவு காலம் பிறந்து இருக்கின்றது. புது உத்வேகத்துடன் பட குழுவினர் இந்த சூட்டிங் பங்கேற்று வருகின்றார்கள். இந்த நிலையில் மீண்டும் ஒரு புது பிரச்சனை தலை தூக்கி இருக்கின்றது. அதாவது இதன் முதல் பாகத்தில் சிபிஐ கதாபாத்திரத்தில் நடிகர் நெடுமுடி வேணு நடித்துள்ளார். அதனை தொடர்ந்து அவர் இரண்டாம் பாகத்திலும் நடித்து வந்தார் ஆனால் கடந்த வருடம் அவர் உடல்நல குறைவின் காரணமாக உயிரிழந்துள்ளார். இதனால் அவர் நடித்த அந்த கதாபாத்திரம் பாதியிலேயே நிற்கின்றது.
மேலும் படத்தின் முக்கிய கேரக்டராக இருக்கும் அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நடிகரை சங்கர் பல நாட்களாக தேடிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அந்த கேரக்டரில் நடிக்க மலையாள நடிகர் நந்து பொதுவெல் கமிட் ஆகியுள்ளார். ஒருவகையில் இவர் பார்ப்பதற்கு நெடுமுடி வேணு சாயலில் இருக்கின்றார். அதனால் தான் சங்கர் இவரை அந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்துள்ளார். மேலும் மலையாள சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் இந்தியன் 2 திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகின்றார். அந்த வகையில் இவர் முதல் திரைப்படத்திலேயே மிகப்பெரிய ஜாம்பவானுடன் இணைந்து இருக்கின்றார். மேலும் இந்தியன் 2 கமலுக்கு எந்த அளவிற்கு வலுவான கதாபாத்திரம் இருக்கின்றதோ அதேபோலத்தான் இந்த சிபிஐ கதாபாத்திரமும். இதனால் தற்போது அவருக்கு மலையாள பெரிய அளவில் ஏகப்பட்ட வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றது. மேலும் இது படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்து இருக்கின்றது.