Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“இலங்கை தமிழர்கள், உலக நலன் வேண்டி பறவை காவடி”…. குடம் குடமாக விநாயகருக்கு பாலாபிஷேகம்….!!!!!

திருப்பரங்குன்றம் இலங்கை தமிழர்கள், உலக நலன் கருதி பறவை காவடி, பால்குடம் எடுத்து விநாயகருக்கு பாலாபிஷேகம் செய்தார்கள்.

மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றத்தை அடுத்திருக்கும் உச்ச பட்டியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் சித்தி விநாயகர் கோவில் இருக்கின்றது. இங்கே விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. இந்நிலையில் நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முகாமில் இருந்தவர்கள் திருப்பரங்குன்றம் சரவண பொய்கைக்கு புறப்பட்டு வந்தார்கள்.

பின் பொய்கை நீரில் புனித நீராடி விநாயகரையும் ஆறுமுகப்பெருமானையும் பூஜை செய்து வழிபட்டார்கள். இதைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க பறவை காவடி, பால் காவடி, மயில் காவடி உள்ளிட்டவை எடுத்து ஊர்வலமாக சென்றார்கள். இதையடுத்து சித்தி விநாயகர் கோவிலில் உலக நலன் அனைத்து தமிழர்களுக்கும் சுபிட்சமாக நலத்துடன் வாழ வேண்டும் என வேண்டப்பட்டது. இதன் பின்னர் விநாயகருக்கு பல அபிஷேகம் செய்யப்பட்டது.

Categories

Tech |