செங்கல்பட்டு கல்பாக்கத்தில் இயங்கி வரக்கூடிய அணுமின் நிலையமானது, தென்இந்தியாவில் மின்உற்பத்தி செய்யும் முக்கிய அணுமின் நிலையமாக விளங்கி வருகிறது. இங்கு உற்பத்தி செய்யபடும் மின்சாரம் பல்வேறு மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த அணுமின் நிலையத்தின் அலகு 2ல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்ற ஆகஸ்டு மாதம் 23ம் தேதி முதல் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது.
இப்போது தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்ட நிலையில் அலகு 2ல் மீண்டும் மின் உற்பத்தி துவங்கியது. முதற்கட்டமாக 110 மெகாவாட் மின்உற்பத்தி செய்யும் பணியை துவங்கிய அலகு 2-ல், படிப்படியாக மின்உற்பத்தி அதிகரித்து தன் முழுத் திறனை அடையும் என அணுமின்நிலைய விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கின்றனர்.