செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி அதிமுக அலுவலகம் கோவிலாம் ஜெயக்குமார் சொல்லுகிறார், அதற்குள் வந்து காலை புதைத்து உடைத்துவிட்டார்கள். நானும் தான் கூட இருந்தேன், என் மேலையும் எஃப் ஐ ஆர் போட்டாச்சு. அது கவலை இல்லை. ஏனென்றால் என் மீது செடிசன் கேஸ் போட்டாரு பழனிசாமி, என் மேல் சேலத்தில் போட்டார்.
நாங்கள் இரண்டு கேள்வி தான் கேட்கிறேன், கோவில் தானே… தலைவரும், அம்மாவும் இருக்கின்ற இடம் தானே, ஏன் பூட்டி வைத்தீர்கள். கோவிலை கிராமங்களில் பூட்டினால் உதைதான் விழும். எதற்காக பூட்டி வைத்தீர்கள், அந்த கோவிலை ? பூட்டி வைக்க வேண்டிய அவசியம் என்ன? முன் கேட்டை பூட்டி, பின் கதவை பூட்டி வேலை செய்பவர்கள் சாவி எடுத்து ஓடுவார்களா?
அந்த கட்சியினுடைய ஒருங்கிணைப்பாளர் எவ்வளவு அழகாக சொல்கிறார், என்னுடைய தாய் வீடு மாதிரி, அங்கிருந்து நான் என்ன திருடி கொண்டு போக வேண்டும் என்று ? திருடுவதற்கு என்ன வைத்துள்ளீர்கள் அலுவலகத்தில் முதலில், யாராவது அங்கிருந்து ஏதாவது திருட முடியுமா? எல்லாம் நீங்கள் கொள்ளையடித்து முடித்து விட்டீர்கள் என தெரிவித்தார்.