தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக மணிரத்தினம் இருக்கிறார். இவர் நடிகை சுகாசினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகை சுஹாசினி மணிரத்தினத்தை திருமணம் செய்த பிறகு படங்களில் அவ்வளவாக நடிக்காமல் இருக்கிறார். இவர் தற்போது கணவருக்கு துணையாக அவருடைய தயாரிப்பு நிறுவனத்தை கவனித்துக் கொள்கிறார். இந்நிலையில் நடிகை சுகாசினி தன்னுடைய கணவரிடம் படங்களில் வைரமுத்துவை புக் செய்ய வேண்டாம் என்று கூறி இருக்கிறாராம். இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது.
இந்தப் படத்திற்கு பாடல் எழுதுவதற்கு முதலில் இயக்குனர் மணிரத்தினம் வைரமுத்துவை தான் புக் செய்ய வேண்டும் என நினைத்துள்ளார். ஆனால் சுகாசினி வைரமுத்து சமீப காலமாகவே சர்ச்சைகளில் சிக்கி வருவதால் அவரை பொன்னியின் செல்வன் படத்தில் புக் செய்தால் படத்திற்கு ஏதாவது பிரச்சனையை வரும் என்று சுகாசினி கூறி இருக்கிறார். இதன் காரணமாகத்தான் மணிரத்தினம் வைரமுத்துவை புக் செய்யாமல் இருந்துள்ளார். அதாவது வைரமுத்து சமீப காலமாகவே ஏ.ஆர் ரகுமானுடன் பிரச்சனை, கடவுள் ஆண்டாள் பிரச்சனை என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
அதோடு பாடகி சின்மயி கொடுத்த மீடு புகார் வைரமுத்துவின் பெயரை பெரிய அளவில் டேமேஜ் செய்து விட்டது. இந்த மீடு புகாரின் காரணமாக வைரமுத்துவுக்கு சில வாய்ப்புகள் பறிபோனது. மேலும் வைரமுத்துவின் மீது எழுந்த பல்வேறு புகார்களின் காரணமாகத்தான் சுகாசினியும் தன்னுடைய கணவர் மணிரத்தினத்திடம் அவரை எந்த படங்களிலும் புக் செய்யக்கூடாது என கட்டளையிட்டுள்ளதாக கூறப்படுகிறது.