Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“திருமணமாகி 2 நாளான பெண் உள்பட 3 பேர் விபத்தில் உயிரிழப்பு”…. திருச்செங்கோடு அருகே நேர்ந்த சோகம்..‌..!!!!!!

திருச்செங்கோடு அருகே மோட்டார் சைக்கிள்-கார் மோதியதில் புதுப்பெண் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சின்னபள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் சுப்ரமணி மோட்டார் சைக்கிளில் திருச்செங்கோடு அருகே இருக்கும் புளியம்பட்டி சுரக்கா தோட்டம் பகுதியில் சென்று கொண்டிருந்தார்கள். இதுபோல திருச்செங்கோடு நெய்க்காரப்பட்டி சிவசக்தி நகர் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மற்றும் அவர் மனைவி ஜீவிதா உள்ளிட்டோர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்து கொண்டிருந்தார்கள். இந்நிலையில் எதிர்பாரவிதமாக மோட்டார் சைக்கிளும் காரும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.

இதில் சம்பவ இடத்திலேயே சுரேஷ் மற்றும் சுப்ரமணி பரிதாபமாக உயிரிழந்தார்கள். ஜீவிதா படுகாயம் அடைந்து வலியால் துடித்தார். ராமகிருஷ்ணன் சிறுகாயத்துடன் தப்பித்தார். இதை பார்த்த அங்கிருந்தவர்கள் ஜீவிதா மற்றும் ராமகிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

ஆனால் ஜீவிதா செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ராமகிருஷ்ணனுக்கு தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். ராமகிருஷ்ணனுக்கும் ஜீவிதாவுக்கும் சென்ற இரண்டு நாட்களுக்கு முன்பாக தான் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணம் ஆன இளம் பெண் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

Categories

Tech |