அண்மையில் ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் பற்றி காதலர் தினத்தில் வெளிப்படுத்தியுள்ளார் நடிகையும், மாடலுமான ரைசா. உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில், வீடியோ ஒன்றின் மூலம் தனது ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸை அறிவித்துள்ளார் ரைசா.
அதில், பச்சை பசேல் என மரங்கள் சூழ்ந்திருக்கு ரம்மியமான சூழல் பின்னணியில் டேபிளில் தனியாக அமர்ந்திருக்கும் ரைசா, ‘நான் ஏற்கெனேவே கூறியதுபோல் எனது ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸை உங்களிடம் வெளிப்படுத்தவுள்ளேன். நான் காதலில் உள்ளேன்’ என்று கூறி அருகில் ஒரு நபரை அழைத்து அறிமுகப்படுத்துகிறார்.
‘இதுதான் வால்டர் பிலிப்ஸ். நாங்கள் இருவரும் காதலில் உள்ளோம். ஹேஷ்டேக் லவ் படத்துக்காக. ஹேஷ்டேக் லவ் படக்குழுவினரின் சார்பில் காதலர் தின வாழ்த்துகள்’ என அவர்கள் இருவரும் சொல்ல அந்த வீடியோ நிறைவடைகிறது.
இதன்மூலம் ‘ஹேஷ்டேக் லவ்’ என்ற புதிய படத்தின் அறிவிப்பை காதலர் தினத்தில், அதில் ஜோடியாக நடிக்கும் வால்டர் – ரைசா ஆகியோர் வித்தியாசமாக அறிவித்துள்ளனர். மீண்டும் ஒரு காதல் என்ற படம் மூலம் புகழ்பெற்றவர் நடிகர் வால்டர் பிலிப்ஸ். இந்தப் படத்தைத் தொடர்ந்து, தற்போது ரைசா ஜோடியாக நடிக்கவுள்ளார்.
முன்னதாக, ரைசா தனது ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸை அறிவிக்க இருப்பதாக நடிகை ஓவியா, டிவி தொகுப்பாளர் மற்றும் நடிகை நிஷா உள்ளிட்டோர் தெரிவித்த நிலையில், அவர்கள் கூறியபடி தற்போது ரைசா அறிவித்துள்ளார்.
Happy Valentines Day ❤️ pic.twitter.com/0YfjA5CFm8
— Raiza (@raizawilson) February 14, 2020