2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி காஷ்மீரின் புல்வாமாவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இவர்களுக்கு நேற்று நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் அஞ்சலி செலுத்தப்பட்டு, நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குமரி ஜவான்ஸ் சார்பில் கடந்த ஆண்டு புல்வாமா பகுதியில் நடந்த தாக்குதலில் வீரமரணமடைந்த 40 ராணுவ வீரர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
குமரி ஜவான்ஸ் அமைப்பு சார்பாக நினைவேந்தல் நிகழ்ச்சியும், இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது. இதில் குமரி மாவாட்ட ஆட்சியர் பிராசாந்த் மு.வடநேரே மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஶ்ரீநாத் கலந்துகொண்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இவர்களுடன் முன்னாள் படை வீரர்கள், சாரண சாரணியர் படை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.