Categories
மாவட்ட செய்திகள்

“மயிலாடுதுறை அருகே காதல் கணவனை அரிவாளால் வெட்டி கொலை செய்த மனைவி”…. போலீசார் கைது செய்து விசாரணை….!!!!!!

குடும்ப தகராறில், மனைவி ஆத்திரம் அடைந்து கணவனை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மொலையூர் மண்தாங்கி திடல் பகுதி சேர்ந்தவர் ரம்யா. இவரும் குமார் என்பவரும் சென்ற சில வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இத்தம்பதியர்களுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருக்கின்ற நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக ரம்யா தனது தாயார் மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகின்றார்.

மேலும் மயிலாடுதுறையில் இருக்கும் பேக்கரியில் வேலை செய்து அதில் வரும் வருமானத்தில் குடும்பத்தை கவனித்து வருகின்றார். இந்த நிலையில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி இரவு குமார், ரம்யா வீட்டிற்கு சென்று அவரிடம் தகராறில் ஈடுபட்டிருக்கின்றார். இதில் ஆத்திரமடைந்த ரம்யா வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து குமாரின் தலையில் வெட்டியதாக சொல்லப்படுகின்றது.

இதில் படுகாயம் அடைந்த குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தகவல் அறிந்த சம்ப இடத்திற்கு வந்த போலீசார் குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். பின் ரம்யாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |