தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (02-09-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
பெரம்பலூர் மாவட்டம்:
பெரம்பலூா் கோட்டத்துக்குள்பட்ட மங்கூன் துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (செப். 3) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.
இதனால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான குரும்பலூா், பாளையம், புது ஆத்தூா், ஈச்சம்பட்டி, மூலக்காடு, லாடபுரம், மேலப்புலியூா், அம்மாபாளையம், களரம்பட்டி, மங்கூன், நக்கசேலம், புது அம்மாபாளையம், அடைக்கம்பட்டி, டி.களத்தூா் பிரிவு சாலை, சிறுவயலூா், குரூா், மாவிலங்கை, விராலிப்பட்டி, கண்ணப்பாடி, சத்திரமனை, வேலூா், கீழக்கணவாய், பொம்மனப்பாடி ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப். 2) காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் பொ. செல்வராஜ் தெரிவித்துள்ளாா்.
தென்காசிமாவட்டம்:
தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, சாம்பவர்வடகரை துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.எனவே அங்கிருந்து மின்வினியோகம் பெறும் தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜர்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல்வலசை, இலத்தூர், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தளம்பாறை, திரவியநகர், ராமச்சந்திரபட்டணம், மேல மெஞ்ஞானபுரம், செங்கோட்டை, கணக்கப்பிள்ளைவலசை, பெரியபிள்ளைவலசை, பிரானூர், கரிசல், வல்லம், கற்குடி, புளியரை, தெற்குமேடு, பூலாங்குடியிருப்பு, புதூர், கட்டளைகுடியிருப்பு.
சுரண்டை
சுரண்டை, இடையர்தவணை, குலையனேரி, இரட்டைக்குளம், சுந்தரபாண்டியபுரம், பாட்டாக்குறிச்சி, வாடியூர், ஆனைகுளம், கரையாளனூர், அச்சங்குன்றம், சாம்பவர்வடகரை, சின்னத்தம்பிநாடானூர், பொய்கை, கள்ளம்புளி, எம்.சி.பொய்கை, துரைச்சாமிபுரம் ஆகிய இடங்களில் அன்றைய தினம் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை தென்காசி மின்வினியோக செயற்பொறியாளர் கற்பக விநாயக சுந்தரம் தெரிவித்துள்ளார்.