Categories
மாநில செய்திகள்

அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு…. உயர்கல்வி செலவை அரசே ஏற்க…. என்னென்ன செய்ய வேண்டும்….????…!!!!

அரசு பள்ளியில் படித்து IIT, IIM போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் கல்விச் செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 6-12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களின் செலவை அரசே ஏற்கும் என நிதிநிலை அறிக்கையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய அறிவியல் கழகம் போன்ற புகழ்பெற்ற உயர் நிறுவனங்களில் சேரும் மாணவர்கள் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று இருக்க வேண்டும்.

மேலும் அவர்கள் அந்த நிறுவனங்களை சேர்வதற்காக கலந்து கொண்ட நுழைவு தேர்வில் ஏடுத்த மதிப்பெண் பட்டியல், சேர்க்கை ஆணை, கல்வி நிறுவனத்தின் தலைவரால் வழங்கப்படும் உரிமைச் சான்றிதழ் மற்றும் அந்த கல்வி நிறுவனங்களில் வசூலிக்கப்படும் அனைத்து கட்டண விவரங்களோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட ஆட்சித்தலைவர் விண்ணப்பித்த மாணவர்கள் அனைத்து சான்றிதழ்களும் சரிபார்த்த பிறகு மேற்படி உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் படிப்புக்காக ஆகும் மொத்த செலவில் விவரங்களோடு தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகத்திற்கு பரிந்துரை செய்து கருத்து அனுப்ப வேண்டும்.

அதன் பிறகு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் இருந்து பெறப்படும் பரிந்துரையை ஆராய்ந்து உயர்கல்விதுறை ஆகும் செலவை கணக்கிட்டு உரிய நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அரசுக்கு கருத்து அனுப்ப வேண்டும். அதன் பின்னர் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் உயர் கல்வி நிறுவனங்களில் பயில்வதை ஊக்குவிப்பதற்காக எந்தவித சாதிய பாகுபாடும் இன்றி ஆண்டு வருமானத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமலும் மாணவர்களின் விவரங்கள் மாவட்ட ஆட்சித் தலைவரின் பரிந்துரை மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் பரிந்துரை ஆகியவற்றை ஆய்வு செய்து நன்றாக பரிசீலித்து முதலாம் வருடத்திலேயே நான்கு வருடத்திற்கான செலவின தகுதிக்கு நிர்வாக ஒப்புதல் அளித்தும் முதலாம் ஆண்டுக்கான செலவினை ஒப்பளிப்பு செய்தும் அரசால் தமிழக அரசால் ஆணை வெளியிடப்படும்.

அடுத்தடுத்த வருடங்களுக்கு கருத்துறுவினை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் பெற்று தொழில்நுட்ப கல்வி ஆணையர் மாணவருக்கு ஒவ்வொரு வருடத்திற்குமான செலவினை வழங்கலாம். இந்தத் தொகையானது சம்பந்தப்பட்ட மாணவருடைய வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |