இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான 2-ம் ஆண்டு பருவ தேர்வில் தமிழ்மொழி பாடத்திட்டத்தினை சேர்க்க உயர் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
சில பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்புகளில் இரண்டாம் ஆண்டு பருவத்தில் தமிழ் மொழி பாடத்திட்டம் நடத்தப்படுவதில்லை. இதனை சரி செய்யும் வகையில் பல்கலைக்கழகங்களில் இரண்டாம் ஆண்டு பருவத் தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்திட்டத்தை கொண்டு வரும் வகையில் உயர் கல்வித்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்த உத்தரவில் தெரிவித்துள்ளதாவது: “உயர்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு நடத்தப்பட்டு வரும் இரண்டாம் ஆண்டு பருவ தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்திட்டம் சில பல்கலைக்கழகங்களில் நடத்தப்படுவது இல்லை. இதனை மாற்றி அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான இரண்டாம் ஆண்டு பருவத் தேர்வுகளில் இனி தமிழ் மொழி பாடத்திட்டத்தினை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு நடத்தப்பட்டு வரும் இரண்டாம் ஆண்டு பருவத்தேர்வில் இனி தமிழ் மொழி பாடத்திறனை கட்டாயம் எடுக்க வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.