Categories
அரசியல் மாநில செய்திகள்

”தாத்தா, தந்தை” வச்சு அரசியல்…! நான் கேட்டதுல தப்பு இல்ல…. DMKவிடம் சீறிய அண்ணாமலை …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையிடம், அடுத்த தலைமுறை இளைஞர்கள் அரசியலுக்கு அதிக அளவில் வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் கூட அனைத்து கட்சியினருமே வார்த்தை போரில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி கொண்டு வருகிறார்கள். இது இளைஞர்களுக்கு இது ஒரு மோசமான வழிகாட்டுதலாக இருக்காதா ? என கேள்வி எழுப்பினார். அதற்க்கு பதிலளித்த அவர்,

அரசியலை பொறுத்தவரை தமிழகத்தில் கருத்தியல் அடிப்படையில் இருக்க வேண்டும்.  கருத்தை கருத்தாக எதிர்கொள்ள வேண்டும். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. நீங்கள் சொல்வது நல்ல ஒரு யோசனை தான். அந்த நேரத்தில யாருமே இன்னொரு வரை தரம் தாழ்த்தி பேசக்கூடாது. நீங்க கேக்குறதுக்கு என்ன அர்த்தம்னு எனக்கு புரியல. தமிழக நிதி அமைச்சர் அவர்கள், அவருடைய முகநூலில் ஒரு கருத்து போடுறாரு.

அதற்கு ஒரு மணி நேரம் கழிச்சு நான் பதில் கொடுக்கின்றேன். அவர் போடுகின்ற கருத்து  நீங்கள் படிச்சு பாருங்க. ஒரு மாநிலத்தினுடைய நிதி அமைச்சர் போடுகின்ற கருத்துக்கு சமமா. அதற்கு தான் நான் சொல்லி இருந்தேன். இந்த மதுரை சம்பவத்தில் பாரத ஜனதா கட்சி தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள் தான் செருப்பு வீசுவதற்கு காரணம் அப்படின்னு சொல்லி இருக்கார். அதற்கு நான் சொன்னேன், அப்படி செருப்பு வீசுற காரணமாக இருந்தால்  அந்த செருப்புக்கு கூட ஒரு தரம் இருக்கு. அந்த தரத்துக்கு கூட நீங்கள் ஈடாக மாட்டீர்கள் என்று சொல்லி இருந்தேன்.

நான் சொன்னதுல எந்த ஒரு விதமான தவறும் கிடையாது. காரணம் மிஸ்டர் பி.டி.ஆர். என்று மரியாதை கொடுத்திருந்தேன். அவர் வந்து எப்பொழுதுமே தான் தன்னுடைய தாத்தா, தந்தையின் அடையாளத்தை வைத்து அரசியல் செய்கிறார். அத பத்தி தான் அதிகமா பேசுறாரு. அதனால இனிஷியல் எடுத்துட்டா நீங்க என்ன ஆவிங்கன்னு கேட்டேன். நான் கேட்டதுல எந்த ஒரு விதமான தவறும் கிடையாது. மிக மரியாதையாக பதில் சொல்லியிருந்தேன் என தெரிவித்தார்.

Categories

Tech |