Categories
மாநில செய்திகள்

“OPERATION LOTUS”…. இதற்காக பா.ஜ.க வெட்கப்படணும்…. ஓபனாக பேசிய கார்த்திக் சிதம்பரம்….!!!!

கோவை விமான நிலையத்தில் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “பொதுமக்களை நாடி செல்லும் எந்த முயற்சியும் கட்சிக்கு ஒரு பலம். தொண்டர்களை சந்தித்து அவர்களை உற்சாகப்படுத்துவதும், பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை அறியவும் இதுஒரு அரியவாய்ப்பு என தெரிவித்தார். குலாம் நபி ஆசாத் விலகியது குறித்த கேள்விக்கு, கட்சியை விட்டு எந்தஒரு கடைத் தொண்டன் சென்றாலும் அது கட்சிக்கு பின்னடைவுதான் என பதிலளித்தார். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியானது விசித்திரமான முறையில் இருக்கிறது. இதற்கிடையில் ஆளும் கட்சியுடன் கூட்டணியில் இருக்கிறோம். இதனால் ஒத்துப்போக வேண்டும், ஏனெனில் கூட்டணி வைத்து வெற்றி பெற்றுள்ளோம்.

இதன் காரணமாக எதிர் கட்சியாக செயல்பட இயலாது. யார் தலைவராக இருப்பினும் இந்த தர்மசங்கடம் எங்களுக்கு இருக்கத் தான் செய்யும் எனவும் தெரிவித்தார். தன்னை பொறுத்தவரையிலும் காமராஜ் போன்ற ஒரு தலைவர் தன்னுடைய அறிவுக்கோ, நினைவுக்கோ தோன்றவில்லை. ஆகவே காமராஜர் போல் ஒருவர் தோன்றினால்தான் காமராஜர் ஆட்சி அமைக்க முடியும் என்று கூறினார். சுங்கக் கட்டணம் உயர்வு பற்றிய கேள்விக்கு மத்தியிலுள்ள அரசு சாதாரண மக்களிடையே வரிச் சுமையை கூட்டிக் கொண்டே போவதுதான் வாடிக்கை. இந்த பிரதமரும், இந்த நிதி அமைச்சரும் இருக்கும்வரை சாதாரண மக்களுக்கு எவ்விதமாக நிவாரணமும் கிடைக்காது எனத் தெரிவித்தார்.

கொள்கை ரீதியாகவோ (அல்லது) அறிவு பூர்வமாகமாகவோ மற்ற கட்சிகளை தங்களது பக்கம் இழுக்க பா.ஜ.க-வினர் முயற்சி செய்கிறார்களா..? என கேட்ட கார்த்திக் சிதம்பரம், அமலாக்கத்துறை, சிபிஐ அமைப்புக்களை ஏவிவிட்டு கட்சியை உடைத்து பணம் கொடுத்து இழுக்கிறார்கள். ஆப்ரேசன் லோட்டஸ் எனும் பெயரில் தவறான வழியில் கட்சிகளை உடைத்து இழுக்கிறார்கள். இதற்காக பா.ஜ.க வெட்கப்பட வேண்டும் என விமர்சித்தார். எதிர் கட்சியைச் சேர்ந்தவர்கள் மற்றும் முழுக்க முழுக்க பா.ஜ.க-வுக்கு எதிராகவுள்ள அரசியல் கட்சிகளின் மீதுதான் சிபிஐ சோதனை நடத்துகின்றனர் என்றார்.

அத்துடன் இந்திபேசும் இந்தியாவில் இந்தி-இந்த்துவா கொள்கை கொஞ்சம் வேரூன்றி இருக்கிறது. அதன்பின் தமிழகத்தில் மக்கள் பிரச்சனை இருக்கிறதா? என்பது தொடர்பான கேள்விக்கு மக்கள் பிரச்சனை இல்லாத நாடே இல்லை. மேலும் யார் ஆட்சிசெய்தாலும் மக்களுக்கு பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். அதனை பொதுமக்களுக்கு சுட்டிகாட்டிக் கொண்டிருப்பதான் அரசியல் கட்சியின் கடமை என்று தெரிவித்தார். இதனிடையில் மக்கள் எளிதாக அணுகக்கூடிய முதலமைச்சராக தமிழக முதலவர் மு.க. ஸ்டாலின் செயல்படுகிறார்” என அவர் பாராட்டினார்.

Categories

Tech |