Categories
தேசிய செய்திகள்

#INSVikrant : போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி…!!

கொச்சியில் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரான ஐஎன்எஸ் விக்ராந் போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி..

கேரளா மாநிலம் கொச்சியில் நாட்டின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வு தொடங்கியது. கடற்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் பிரதமர் மோடி. அதனைத்தொடர்ந்து இந்தியாவின் முதல் உள்நாட்டு விமான தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும் இந்திய கடற்படைக்கு புதிய கொடியை அறிமுகம் செய்து வைத்தார் பிரதமர் மோடி.. இதில் கேரள முதல்வர் பினராயி விஜயன், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

2006ம் ஆண்டு முதல் உருவாக்கப்பட்டு வரும் இந்த ஐஎன்எஸ் விக்ராந் கப்பலின் சிறப்பு என்ன?

விமானம் தாங்கி ஐ என் எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. அதிகபட்ச வேகமாக 28 நாட்ஸ் திறன் கொண்ட இந்த போர்க்கப்பலில் கடற்படை அதிகாரிகள் வீரர்கள் என 1,700 பேர் இருப்பார்கள். இரண்டு அறுவை சிகிச்சை அறைகள், 16 படுகைகள் சிடி ஸ்கேன் என மினி மருத்துவமனையே போர்க்கப்பலில் இடம் பெற்றுள்ளது. இந்திய கடற்படையின் 4ஆவது விமானம் தாங்கி போர்க்கப்பல் இதுவாகும்.

இதுவரை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கப்பல்களை விட ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் சுமார் 7 மடங்கு பெரியதாகும். 262 மீட்டர் நீளமும், 62 மீட்டர் அகலமும், 59 மீட்டர் உயரமும் கொண்டது ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல். சுமார் 43 ஆயிரம் டன் எடையுடன் 14 அடுக்குகள் கொண்ட ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் 2,300 அறைகள் உள்ளன. ரூபாய் 20,000 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது ஐ.என்.எஸ் கப்பல். ஒரு சிறிய நகரத்திற்கு தேவையான மின்சாரத்தை உருவாக்கும் திறன் உள்ள கப்பலில் 34 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் இருக்கும்.

Categories

Tech |