Categories
அரசியல் மாநில செய்திகள்

பொதுக்குழு தீர்ப்பு வந்துடுச்சு…! ஈபிஎஸ் கையில் ADMK … ஆனால் தேர்தல் ஆணையத்தில் ட்விஸ்ட்… ஆர்.டி.ஐயில் பரபரப்பு தகவல் …!!

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இரு நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்தது. அதிமுக பொதுக்குழு செல்லும், இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டது செல்லும், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு செல்லாது என்றெல்லாம் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவு எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு பெரும் மகிழ்ச்சியையும்,  ஓபிஎஸ் தரப்பிற்கு பலத்த அடியையும் கொடுத்துள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த அரசியல் விமர்சகர்கள்,  தனி தனி நீதிபதியை பொறுத்த வரை அதிமுக பொதுக்குழு கூட்டுகின்ற நடைமுறையை மட்டும் தான் அவர் கூறியிருந்தார். இரு நீதிபதிகள் அமர்வு அதனை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்று தான் தெரிகிறது. இதற்கு முந்தைய தனி நீதிபதி கொடுத்த தீர்ப்பிலே, நீதிபதிகளுக்கு நீதிபதி வேறுபடுகின்ற விஷயம்தான். எனவே இதுல பெரிய அளவுக்கு சட்டம் நுணுக்கங்கள் பார்க்க முடியாது. ஒரு வழக்கை ஒரு நீதிபதி ஒரு கோணத்தில் பார்ப்பார். இன்னொரு நீதிபதி வேறு கோணத்தில் இருந்து அணுகுவார்.

இன்னும் சொல்லப்போனால் அதற்காகத்தான் நாம் மேல்முறையீடு வைத்திருக்கிறோம். நீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்கு போகும். ஆனால் இப்போதைக்கு இது எடப்பாடி பழனிச்சாமிக்கான அரசியல் வெற்றியாக தான் பார்க்க வேண்டும். காரணம் என்னவென்றால் இப்போதைக்கு அவர் தான் இடைக்கால பொதுச் செயலாளர். ஆனால் சமீபத்தில் தேர்தல் ஆணையத்திடம் ஆர்டிஐயில் ராம்குமார் ஆதித்யன் சில கேள்விகளை கேட்டு இருந்தார்.

அதற்க்கு ஆர்.டி.ஐ பதில் அளித்து இருக்கின்றது. அந்த பதிலில், ஜூலை 11 பொதுக்குழு, அதற்கு முந்தைய பொதுக்குழு, அதற்கு முன்பு எடுக்கப்பட்ட செயற்குழு முடிவு எல்லாமே தேர்தல் ஆணையத்தில் பரிசீலனையில் தான் இருக்கின்றன. இதுவரைக்கும் தேர்தல் ஆணையம் அது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த மூன்று விஷயங்கள் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆக தேர்தல் ஆணையத்தில் முடிவென்பது யார் பக்கம் என்பது நமக்கு தெரியாது ?

காரணம் சின்னம் மற்றும் கட்சியின் பெயர் பயன்பாட்டு உரிமை இந்த இரண்டுமே தேர்தல் ஆணையம் தான் நிர்ணயிக்க வேண்டும். அது பொதுக்குழு,  செயற்குழு எல்லாம் நீதிமன்றங்கள் விதிகளுக்கு உள்ள போகலாமே தவிர கடைசியாக வாக்காளர்கள் ஓட்டு போடப்படுவது இரட்டை இலை என்று சின்னத்திற்கு, அண்ணா திமுக கட்சிக்கு. எனவே தேர்தல் ஆணையம் முடிவு தான்  முக்கியம். இதுவரைக்கும் தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தான் தெரிகிறது என பிரபல அரசியல் விமர்சகர் கருத்து தெரிவித்துள்ளார்.

Categories

Tech |