Categories
சினிமா

ரஜினியுடன் இணையும் பிரபல நடிகர்….. யார் தெரியுமா?….. லீக்கான சீக்ரட்…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். இவர் தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணா ஆகியோர் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது மேலும் ஒரு ஹீரோ ஜெயிலர் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது சென்னை 28, சுப்ரமணியபுரம், ராஜா ராணி, எங்கேயும் எப்போதும் போன்ற படங்களில் நடித்து பிரபலமான ஜெய் ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடிக்க இருக்கிறார். அவரின் கதாபாத்திரம் படத்தில் திருப்பு முனையாக ஏற்படுத்துவதாக இருக்கும் என்பதால் அவர் நடிப்பதை சீக்ரட்டாக படக்குழு வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீப காலமாக தொடர் தோல்விகளில் இருக்கும் ஜெய், இந்த படத்தின் மூலம் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |