Categories
தேசிய செய்திகள்

“பிரச்சனைகளை தீர்க்கும் ஒரே மாநிலம் கர்நாடகா” முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் புகழாரம்….!!!

எப்போதும் பிரச்சனையை தீர்க்கும் மாநிலமாக கர்நாடகா இருக்கிறது என முதல் மந்திரி கூறியுள்ளார்.

உத்திரபிரதேச மாநிலத்தின் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத். இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் போது முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கூறியதாவது, உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்றினால் பல்வேறு மக்கள் பாதிக்கப் பட்டனர். இந்த வைரஸ் தொற்று மனித இனத்திற்கு பெரும் சவாலாக இருந்தது. இந்த தொற்றில் இருந்து இந்தியா மீண்டு வந்ததை பார்த்து உலகமே ஆச்சரியப்பட்டது. இதற்கு காரணம் யோகா மற்றும் நம்முடைய நாட்டின் பாரம்பரிய மருத்துவம் தான்.

நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அனைவரும் யோகா செய்வதோடு, சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், இயற்கை மருத்துவம், யுனானி போன்றவற்றை நோக்கி பயணிக்க வேண்டும். கர்நாடக மாநிலம் தான் எப்போதும் பிரச்சனையை தீர்க்கும் சிறந்த மாநிலமாக திகழ்கிறது. ராமபிரானுக்கு வனவாசத்தின் போது ஆஞ்சநேயர் உதவி செய்தார். இது ராம ராஜ்ஜியம் உருவாவதற்கு அடித்தளமாக இருந்தது. தகவல் தொழில்நுட்பத்தின் தலைநகராக பெங்களூர் இருக்கிறது. இது உலகின் பாரம்பரிய மருத்துவ மையமாகவும் இருக்கிறது. மேலும் இந்தியாவை வல்லரசாக வேண்டும் என்ற பிரதமரின் இலக்கை அடைய அனைத்து மக்களும் தங்கள் துறைகளில் அதிக நிபுணத்துவத்தை கொண்டுவர வேண்டும் என்றார்.

Categories

Tech |