எவ்வளவுதான் பெரியர்வர்களாக இருந்தாலும், குழந்தைதனமான செய்கைகள் ஒவ்வொருவரிடமும் இருக்கும். அந்த செய்கைகள் மற்றவர்கள் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள் என தெரியாது. அந்த அடிப்படையில் 50 வயது பெண் ஒருவர் தான் இணையத்தில் பலரது கவனத்தையும் பெற்றுள்ளார். அதாவது அந்த பெண் தன் வாழ்வை கேர் ஃப்ரீ ஆக வாழ்ந்து வருகிறார். சீனாவின் ஷாங்காய் நகரை சேர்ந்த 50 வயதுடைய அந்த பெண் நாம் சிறு வயதில் பார்த்த டிஸ்னி கார்ட்டூன்களில் வரும் கதாபாத்திரங்களை போல தான் உடையணிகிறார்.
ஆசைக்கா அவர் ஒருநாள் அணிகிறார் என்று பார்த்தால், ஆனால் தினசரி டிஸ்னி பிரின்செஸ் போல தான் உடையணிகிறார். எப்போதும், எங்கு சென்றாலும் அப்பெண் டிஸ்னி உடையில்தான் செல்கிறார். இவருடைய தினசரி outfit, ஒரு கவுன், தலையில் கிரீடம் போல அணியும் டியாரா எனப்படும் அணிகலன், கழுத்தில் அந்த கவுனுக்கு ஏற்றவாறு ஒரு நெக்லஸ், கையில் ஒரு ஹேண்ட் பேக் ஆகியவையுடன் யார் இவரைப் பற்றி என்ன சொன்னாலும் கவலைப்படுவதில்லை. இந்த பெண்மணிக்கு உள்ளூர் வாசிகள் கொடுத்துள்ள பெயர் Little Princess of Anfu Road.