செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கண்ணாமூச்சி ஆட்டம் எல்லாம் அவர்கள் காட்டலாம், எங்களை பொறுத்தவரை சட்டப்படி அதிமுக விதிப்படி இதய தெய்வம் புரட்சித்தலைவி பொன்மனச் செம்மல் டாக்டர் எம்ஜிஆர் வகுத்து தந்த, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எந்த அடிப்படையிலே பொதுக்குழு கூட்டினாரோ, அந்த அடிப்படையில் தான் பொதுக்குழு கூட்டப்பட்டது. தர்மம் வென்று இருக்கின்றது, நியாயம் வென்று இருக்கின்றது.
ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு சென்றால் என்ன செய்யலாம் ? எந்த மாதிரி நடவடிக்கைகளை எடுப்பது ? என சட்டவல்லுனர் குழு முடிவு செய்யும். நாங்கள் இப்போது வெற்றியை கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம். அவர்கள் எங்கு போனாலும் எங்களுக்கு வெற்றிதான். சட்டத்திற்கு புறம்பாக எதுவும் நடக்காது. இனிமேல் ஓபிஎஸ் அரசியல் எதிர்காலம் ஜீரோ தான் என விமர்சனம் செய்தார்.