Categories
அரசியல் மாநில செய்திகள்

Breaking: அதிமுக பொதுக்குழு செல்லாது : தீர்ப்பின் முழு விவரம் …!!

அதிமுக பொதுக்குழு வழக்கில் தனி நீதிபதி உத்தரவு செல்லாது, எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தற்போது அந்த தீர்ப்பின் முழு விவரம் வெளியாகியுள்ளது. உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்னதாக ஆரம்ப பகுதிகளில் பகுதியில் திருநாவுக்கரசர் தொடர்ந்த வழக்கு, பொதுக்குழு கூட்டியது  தொடர்பாக நீதிபதிகள் விவாதித்து இருக்கிறார்.

எம்ஜிஆர் மறைவிற்கு துணைப் பொதுச் செயலாளர் எனும் முறையில் திருநாவுக்கரசர் வழக்கு தொடர்ந்ததாகவும்,  அப்போதே கட்சி விகாரங்களில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை உகந்தது என்று உயர்நீதிமன்ற முடிவு செய்ததன் அடிப்படையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி வழக்கையும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்கிறோம்.

ஆனால் அப்போது போட்டிக்கு பொதுக்குழு என்று ஒரு நிலை  இருந்ததால் அந்த கூட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது அப்படி ஒரு போட்டி பொதுக் குழுவுக்கு எந்தவித சூழலும் ஏற்படாத நிலையில், பொதுக்குழு செல்லாது என்று அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக தங்களது உத்தரவில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வைக்கப்பட்ட வாதங்களின் அடிப்படையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இல்லை என்று தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி இருப்பதாகவும், அதன் அடிப்படையிலே தலைமை நிலைய செயலாளர் என்ற அடிப்படையில் கடிதம் எழுதி இருக்கிறார்.

அதன் அடிப்படையில் பொதுக்குழு கூட்டம் முடிவு என்பது செல்லும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஜூலை பதினோராம் தேதி பொதுக்குழு கூடும் என்று அவை தலைவர் மூலமாக ஜூன் 23ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பொழுது, ஓ பன்னீர்செல்வமும் அதே இடத்தில் இருந்திருக்கிறார். அந்த பொதுக்குழு கூட்டத்தில் தான் கலந்து கொண்டிருக்கின்ற நிலையில் தனக்கு தெரியாது என்று ஓபிஎஸ் மறுக்க முடியாது என்று நீதிபதிகள் சுட்டி காட்டிருக்கிறார்.

இருவரும் சேர்ந்து, இணைந்து செயல்பட முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் போது  இணைந்து தான் செயற்குழு – பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்பது கட்சியை செயல்பட முடியாத நிலைக்கு முடக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டும், அது உறுப்பினர்களுக்கு தவறிழைப்பதாகிவிடும் எனவே அதன் அடிப்படையில் தனி நீதிபதி உத்தரவை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டு இருக்கிறார்.

அதேசமயம் ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் காலியாகிவிட்டதா என்பது தொடர்பாக தற்போது நிலையில் முடிவெடுக்க முடியாது என்றும்,  அது பிரதான உரிமையியல் வழக்கின் இறுதி வாதங்களுக்கு பிறகு தான் முடிவு செய்ய வேண்டும் என்றும், நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டு இருக்கின்றார். எனவே ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதியாகி விட்டதா ? என்பதனை எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை என்பதையும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் பதிவு செய்திருக்கிறார்கள்.

Categories

Tech |