அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் காலாவதியாகி விட்டதா என்பது பற்றி பிரதான வழக்கில் தான் முடிவெடுக்க முடியும் என்று நீதிபதிகள் தெரிவித்து இருக்கிறார்கள். முன்னதாக தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்கள். இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு செல்லாது என்கின்ற தீர்ப்பின் முழு விவரம் வெளியாகி இருக்கின்றது.
128 பக்கம்:
தனி நீதிபதியின் தீர்ப்பை இரத்து செய்து இரு நீதிபதிகள் அமர்வு, 128 பக்கங்களில் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. முன்னதாக இபிஎஸ் தரப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் இன்பதுரை செய்தியாளர்களை சந்திக்கும் போது கூட சொல்லிருந்தார். தீர்ப்பின் முழு விவரங்கள் கிடைத்த பிறகு இது சம்பந்தமான பல்வேறு அறிவிப்புகள் வெளியாகலாம். அது குறித்து விரிவாக சொல்லலாம் என்று குறிப்பிட்டு இருந்தார்கள். இந்த நிலையில் வழக்கின் முழு விவரம் வெளியாகி உள்ளது.
திருநாவுக்கரசர்:
இந்த வழக்கின் தீர்ப்பில் தொடக்கத்தில் எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு, பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவை அணுக முடியாததால், துணைப் பொதுச் செயலாளர் எனும் முறையில் அப்போது பொதுக்குழு கூட்ட திருநாவுக்கரசர் வழக்கு தொடர்ந்ததாகவும், அப்போதே கட்சி விகாரங்களில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை உகந்தது என்று உயர்நீதிமன்ற முடிவு செய்ததன் அடிப்படையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி வழக்கையும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்கிறோம்.
போட்டி பொதுக்குழு:
ஆனால் அப்போது போட்டிக்கு பொதுக்குழு என்று ஒரு நிலை உருவாக்கி இருந்ததால், அந்த கூட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது அப்படி ஒரு போட்டிபொதுக்குழுவுக்கு எந்தவித சூழலும் ஏற்படாத நிலையில், பொதுக்குழு செல்லாது என்ற அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
தலைமை நிலைய செயலாளர்:
குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வைக்கப்பட்ட வாதங்களின் அடிப்படையில், ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இல்லை என்று தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி இருப்பதாகவும், அதன் அடிப்படையிலே தலைமை நிலைய செயலாளர் என்ற முறையில் பொதுக்குழுவுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அதன் அடிப்படையில் பொதுக்குழு கூட்டபட்ட முடிவு என்பது செல்லும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
ஓபிஎஸ்_க்கு தெரியாது:
ஜூலை பதினோராம் தேதி பொதுக்குழு கூடும் என்று அவை தலைவர் மூலமாக ஜூன் 23ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பொழுது ஓ.பன்னீர்செல்வமும் அதே இடத்தில் இருந்திருக்கிறார். அந்த பொதுக்குழு கூட்டத்தில் தான் கலந்து கொண்டிருக்கின்ற நிலையில், தனக்கு தெரியாது என்று மறுக்க முடியாது என்றும், நீதிபதிகள் சுட்டி காட்டிருக்கிறார்.
முழுமையாக இரத்து:
இருவரும் இணைந்து செயல்பட முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் போது, இணைந்து தான் செயற்குழு – பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்பது கட்சியை செயல்பட முடியாத நிலைக்கு முடக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டதாகிவிடும். அது உறுப்பினர்களுக்கு தவறிழைப்பதாகிவிடும். எனவே அதன் அடிப்படையில் தனி நீதிபதி உத்தரவை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக உத்தரவில் குறிப்பிட்டு இருக்கிறார்.
கருத்து சொல்லல:
அதேசமயம் இரு ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாகிவிட்டதா ? இல்லையா ? என்பது தொடர்பாக தற்போதைய நிலையில் முடிவெடுக்க முடியாது என்றும், அது பிரதான உரிமையியல் வழக்கின் இறுதி வாதங்களுக்கு பிறகு தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டு, அது தொடர்பாக எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை என்பதையும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் பதிவு செய்திருக்கிறார்கள். இதுதான் கோர்ட்டில் நடந்த ட்விஸ்ட்டாக பார்க்கப்படுகின்றது.
பிரதான வழக்கு:
பிரதான வழக்கு என்பது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இல்லாமல் பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தது செல்லாது. அந்த முடிவை ரத்து செய்ய வேண்டும். பொது குழு கூட்டுவதற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே அதிகாரம் இருப்பது என்பது தான் பிரதான வழக்கு, சிவில் வழக்கு என்று கூறுவார்கள், உரிமையியல் வழக்கு.
இடைக்கால மனு:
அந்த பிரதான சிவில் வழக்கு கோரிக்கை தான் தற்போது ஜூலை 11ஆம் தேதி கூட்டப்பட்ட பொதுக்குழு கூட்டத்தை இரத்து செய்ய வேண்டும். அதற்க்கு அனுப்பப்பட்ட நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் என்று வழங்க தொடரப்பட்டது. அந்த இடைக்கால மனுவை விசாரித்த தனி நீதிபதி தான் பொதுக்குழு கூட்ட அனுப்பப்பட்ட நோட்டீஸ் செல்லாது, ஒருங்கிணைப்பாளர் – ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று உத்தரவை பிறப்பித்து இருந்தார்.
மேல்முறையீட்டு:
அந்த இடைக்கால மனு மீது பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை எதிர்த்து தான், எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. பிரதான வழக்கு இன்னும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாத நிலையில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது. அந்த இடைக்கால மனு மீதான மேல்முறையீட்டு வழக்கு மீது தான் நீதிபதி இன்று உத்தரவு பிறப்பித்தார்.
நிலுவையில் ட்விஸ்ட் வழக்கு:
இந்த இடைக்கால உத்தரவு மீதான நிலையை தற்போது உயர் நீதிமன்றம் அளவில் முடிந்து விட்டாலும், பிரதான வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பாக நிலுவையில் தான் இருக்கிறது. அந்த வழக்கு விசாரணை வரும் போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி இருக்கின்றதா ? காலியாகிவிட்டதா ?
ஓரிரு ஆண்டுகள்;
பொதுக்குழுவுக்கு அதை அங்கீகரிக்ம் அல்லது நிராகரிக்கும் அதிகாரம் இருக்கிறதா ? என்பது முழுவதுமாக, விரிவான விசாரணை நடத்தப்படும். அதன் பிறகு வழக்கின் இறுதி தீர்ப்பு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அந்த வழக்கு விசாரணைக்கும் எடுத்துக் கொள்வதற்கும், முடிவதற்கு ஓரிரு, ஆண்டுகள் கால அவகாசம் தேவைப்படும் என்றும் கூறப்படுகின்றது.