அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, திராவிட முன்னேற்றக் கழகத்தை பொருத்தவரைக்கும் ஆட்சியில் இருக்கின்ற போது ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பேச்சு. அதுதான் அவர்களுடைய நிலைப்பாடு.ஆட்சிக்கு வருவதற்கு முன்பு என்ன சொன்னாங்க ?
தேர்தல் நேரத்துல திரு ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கின்றார், அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். திரு உதயாநிதி ஸ்டாலின் எம்எல்ஏ அவர்களும்பேசினார். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட்டு தேர்வு ரத்து செய்யப்படும். எவ்வளவு நாளாச்சு ? நீங்க சொல்லி 15 மாதம் ஆச்சு. மக்கள் என்னனு கேக்குறாங்க. அத்தனையும் பொய்.
பொய் பேசுவதற்கு நோபல் பரிசு கொடுக்கணும்னா, திமுக கட்சிக்கு கொடுத்தா பொருத்தமா இருக்கும். உண்மையை வெளிப்படுத்த பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம் போறதா சொல்லி இருக்காரு ? என்ன உண்மைய சொல்ல போறாரு ?கதவை உடைச்சேன்னு சொல்ல போறாரா ?
சூறையாடினேன், பொருளை திருடிட்டு போனேன் என மக்களிடம் சொல்ல முடியுமா ? இதை யாரும் மறக்க முடியாது. உங்களுடைய தொலைக்காட்சியில் ஆதாரத்தோடு மக்களுக்கு எடுத்து வச்சிருக்கீங்க. தொண்டர்கள் பார்த்தால் தான் கேள்வி கேட்பார்கள். அப்பொழுதுதான் அவருக்கு புரியும் என கிண்டலடித்தார்.